தமிழ் செம்மொழி தினம் : கவிதை தனி மொழியாம் தமிழ்மொழி இது சுயமாய் வளர்ந்த மொழி..!! செம்மொழியாம் இம்மொழி செங்கோல் ஈன்ற மொழி..!! சங்கம் வளர்த்த மொழி சங்கென முழங்கும் மொழி..!! நாகரிகம் தோற்றிய மொழி நாள்தோறும் போற்றும் மொழி.. கொஞ்சம் இலக்கணமும் கெஞ்சும் இலக்கியமும் கொஞ்சி பேசும் இயல்பு மொழி.. காதலும் காவியமும் ஒன்றாய் பினைந்த மொழி.. கண்களும் காட்சியுமாய் நம் மரபாய் வளர்ந்த மொழி.. ஆசை காதலாய் கொஞ்சும் கோபமாய் நெஞ்சம் தேடும் இன்ப மொழி.. பிள்ளைதமிழ் காதல்தமிழ் காவியதமிழ் காணும்தமிழ் இலக்கியதமிழ் இயல்புதமிழ் கொஞ்சும்தமிழ் கொல்லைதமிழ் முத்தமிழ் செந்தமிழ் தனித்தமிழ் என்றும்தமிழ் எதிலும்தமிழ் தனித்து நின்று தலை ஓங்க செய்யும் நம்பிக்கை தமிழ் ..!!
முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி! கொத்தமல்லி இலை நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவு பொருள். நமது சமையலை அலங்கரிப்பதற்கும், நல்ல வாசனையை சமையலுக்கு கொடுப்பதற்கும், சுவைக்காவும் தான் பயன்படுத்தியிருப்போம். அது மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? கொத்தமல்லி இலையில் அதிக வாசனை திரவம் இருப்பதால் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும். *கொத்தமல்லி மற்றும் கற்றாழை அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது. *முகப்பருக்கள் முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும். பேஸ் பேக் கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும். *கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை கொத்தமல்லி இலை ச...
ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் தான். ஃபேஸ்புக் அளவிற்கு டுவிட்டர் லாபகரமாக இல்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று திடீரென ஃபேஸ்புக் சில மணி நேரம் நிலை தடுமாறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் நுழைய முடியாமல் அதன் பயனாளிகள் தவித்தனர். ஃபேஸ்புக் முடங்கியதற்கு என்ன காரணம் என்று டுவிட்டரில் அனைவரும் கேள்வி கேட்டனர். இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் இணையதளத்தில் சிறு தடங்களில் உள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் ஃபேஸ்புக் சேவை தொடரும் என்று செய்தி வெளியிட்டிருந்தார். ஃபேஸ்புக் உரிமையாளர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது.
Comments
Post a Comment