Posts

Showing posts from June, 2017

பள்ளிக்கு நீச்சல் அடித்துச் செல்லும் ஆசிரியர்!

Image
கேரளா மலப்புரத்தில் உள்ள  படிஞ்சதுமுரு முஸ்லிம் கீழ்நிலை பள்ளியில்  கணித ஆசிரியராக   பணிபுரிந்து வருபவர் அப்துல் மாலிக்.பள்ளிக்கூடம்  24 கிமி  தூரத்தில் உள்ளதால் இவர் தினமும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு ஆற்றை கடந்து தான் செல்கிறார். ஒரு பிளாஸ்டிக் பையில் தனது துணியையும் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு நீச்சல் அடிப்பார் இவர். கரையை அடைந்தவுடன் தன் உடையை மாற்றிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் சென்றுவிடுவார். சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆன இவர், பல ஆண்டுகளில் ஆறு மிகவும் மாசடைந்துள்ளதை பற்றி கவலை தெரிவிக்கிறார். தன் மாணவர்களுடன் ஆறில் இறங்கி நீச்சல் அடித்தவாறே அதில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுகிறார். அவர் கூறியதாவது:  பேருந்து பயணம் நீண்ட தூரம் இருப்பதால் ஆற்றை கடந்து வருவது சுலபாக உள்ளது.எந்தவித செலவுமின்றி, பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தையும் தவிர்க்க முடியும்.

ராணி சின்னம்மா பல்கலைக்கழகத்தில் ஜி.எஸ்.டி பாடம்

Image
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ராணி சின்னம்மா பல்கலையில்  ஜி.எஸ்.டி  பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலையில் உள்ள  பி.காம்  வகுப்பில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் ஆண்டு பாடத்தி்ட்டத்தில் மாணவர்கள், நடைமுறைப்படுத்தப்பட உள்ள வரி முறையை தெரிந்து கொள்ளும் விதமாக  ஜி.எஸ்டி-1, ஜி,எஸ்.டி-2  என்ற பாடம் கட்டாயமாக்கபபட்டுள்ளது.

நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி அமல்

Image
ஜூன் 30 இன்று இரவு முதல் அமுல்படுத்தப்படுகிறது.இன்று இரவு 11 மணிக்கு ஜி.எஸ்.டி குறித்து பார்லிமென்டில் குறும்படம் திரையிடப்படுகிறது. 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 11.45 மணிக்கு பேசுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு ஜி.எஸ்.டி அமல் குறித்து ஜனாதிபதி அறிவிப்பார்.

வடிவேலு காமெடி (dubshmash)

Image

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்

Image
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில்  செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்காக  பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த  70 வயது  மூதாட்டி பணியாற்றி வருகிறார்.ரோகானியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் நேற்று இரவு (ஜூன் 28)  மூதாட்டியை பாலியல் பலாத்காரம்   செய்துவிட்டு செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவத்தை கேள்வி பட்ட அக்கம்பக்கத்தின் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாதுகாவலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை : சிறுமியின் வீரச்செயல்

Image
உ.பி., மாநிலம், மீரட் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சீமா கவுசிக். கணவர் வரதட்சணை கொடுமை செய்ததால், சீமா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அவரது கணவர் சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களை கைது செய்ய, போலீசார்  50 ஆயிரம் ரூபாய் லஞ்சம்  கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சாந்தி ஸ்வரூப், சீமாவின் ஆறு வயது மகள் மான்வியுடன் மீரட் போலீஸ் ஐ.ஜி., ராம்குமார் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சிறுமி மான்வி கையில் ஒரு உண்டியல் இருந்தது. மக்கள் குறை கேட்டுக் கொண்டு இருந்த ஐ.ஜி., சிறுமியை அழைத்து விசாரித்தார். அதற்கு சிறுமி மான்வி,  ' என் தாய் தற்கொலைக்கு  காரணமானவர்களை கைது செய்ய போலீசார் லஞ்சம் கேட்கின்றனர். எனவே, என் உண்டியல் பணத்தை லஞ்சமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மழலை குரலில் கூறினாள்.  இதை கேட்டு அதிர்ந்து போன ஐ.ஜி., கண்டிப்பாக நடவடிக்கை எட...

சாகச நிகழ்ச்சியில் குழிதோண்டி புதைக்கப்பட்ட வாலிபர் : பரிசாக மரணம்

Image
சாகச நிகழ்ச்சியில் குழிதோண்டி புதைக்கப்பட்ட வாலிபர்  ஹரியானா மாநிலம், பானிப்பட் மாவட்டம், சமால்கா தாலுகாவில் உள்ள குரார் என்ற கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளைஞர் சுமித் காதி படிப்பை பாதிலே விட்டு விட்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் ஜகதீப் என்பவருடன் சுமித் காதி சேர்ந்தார். கடந்த  ஜூன், 24ம்  தேதி இரவு  10 மணிக்கு  ஜகதீப், சுமித் காதி மற்றும் ஏழு பேர் சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்ட ஒன்று கூடினர்.அங்குள்ள ஒரு மைதானத்தில்  பெரிய குழி தோண்டப்பட்டது.  சுமித் காதி சாக்கு பையில் நுழைந்து கொண்டார். அந்த சாக்கு பைக்கு  21 முடிச்சுகள்  போடப்பட்டன. அதற்கு முன் சுமித் காதியிடம் ஒரு மொபைல் போன் தரப்பட்டது. பின்னர் அந்த சாக்கு பை, குழியில் இறக்கி விடப்பட்டு மரப்பலகைகளால் மூடப்பட்டது. அதன் மீது மண் கொட்டி மேலும் இறுக்கமாக மூடிவிட்டனர். அடுத்த நாள் இரவு,  10 மணிக்கு  குழியில் இருந்து சுமித் காதி உயிருடன் வெளியே வருவார் என கிராம மக்களிடம் கூறி ,  8,500 ரூபாய் வரை வசூலித்தனர்.  குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்...

பெங்காலி பாரம்பரியத்தில் சேலை கட்டி பொட்டு வைத்த நடிகைக்கு வந்த சோதனை

Image
பாலிவுட் நடிகை சோஹா அலிகான் பெங்காலி பாரம்பரியத்தில் சேலை கட்டி பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை  இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிருந்தார். 38 வயதான  அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்  பிங்க் நிற சேலைகட்டி  தனது கணவர் குணால் கேமுவுடன் போஸ் கொடுத்திருந்தார். அந்தப்புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த  முஸ்லிம்கள் பலர் ‘சோஹா அலிகான் உண்மையான இஸ்லாமியர் அல்ல’ என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஈகை பண்டிகையை  ஒட்டி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஈகை பண்டிகையின் போது  இஸ்லாமிய பெண்கள்  சேலை அணிய மாட்டார்கள்.சோஹா அலிகானை இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளக் கூடாது, அவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என ட்விட்டர்களில் பலர் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

பிரித்தானிய கடலில் மூழ்கி ஐவர் பலி - விசாரணைகள் தீவிரம்

Image
பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ்  கடலில் மூழ்கி பலியான தமிழர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.  உயிரிழந்தவர்களில் சகோதரர்கள் இருவர் உட்பட ஐவர் உள்ளடங்குகின்றனர். 2 வயதுடைய  நிதர்ஷன் ரவி,  23 வயதுடைய  இந்துஷன்  ,22 வயதான  கோபிநாதன் , 19 வயதான  கெனிகன் சத்தியநாதன் , 27 வயதான  குருசாந்த் சிறிதவராஜா  ஆகியோரே உயிரிழந்தவர்களாகும். உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். எனினும் இரண்டு சகோதரர்களும் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதென உயிரிழந்தவர்களின் குடும்ப வழக்கறிஞர் Patrick Roche தெரிவித்துள்ளார்.உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எ...

லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு!

Image
கிழக்கு ஆப்ரிக்கா  பகுதியில்  மொரிசியஸ்  அருகே  ரியூனியன்  என்ற தீவு அமைந்திருக்கிறது இங்கே தான் தமிழர்கள் இன்றளவில் லட்சக்கணக்கில் குடும்பம், குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் மொத்த பரப்பளவே  2500 கி.மீ   சதுர தூரம் தான். 2012-ன் மக்கள் தொகை கணக்களவு படி இந்த தீவில் ஏறத்தாழ  8.4 லட்சம் பேர்   வாழ்ந்து வருகின்றனர். இவர்களில்  2 லட்சம் பேர் தமிழர்கள்  என கூறப்படுகிறது. இந்த தீவு பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கே மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.180 ஆண்டுகளுக்கு முன், பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டுக்கு கீழே அடிமையாக இருந்து வந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்தும், மற்ற தமிழக பகுதிகளில் இருந்தும் ஏஜெண்டுகள் மூலம் பலர் இந்த ரியூனியன் தீவிற்கு கரும்பு தோட்டங்களில் பணிபுரிய அழைத்து செல்லப்பட்டனர்.ஆரம்பக் காலக்கட்டத்தில்  பிரெஞ்சு அரசின் கீழே இங்கிருந்து  சென்ற தமிழர்கள் அடிமை போல தான் நடத்தப்பட்டனர். பிறகு ஆண்டுகள் கழிய,  பிரான்ஸ் நாட்ட...

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு சிறப்பு அறிவிப்பு

Image
பிரித்தானியாவில் வசிக்கும் 3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும்  “குடியேற்ற நிலைமை”  தொடர்பான சிறப்பு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை சட்டத்திற்கு தேவைப்படுவதாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு, தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அல்லது பொது சேவைகளை மேற்கொள்ளும் போது உறுதி செய்து கொள்வதற்காக இந்த அடையாள அட்டை தேவைப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் திட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டும் 20 பக்கங்களை கொண்ட ஆவணம் தயாரிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் இருந்தவர்களுக்கான புதிய “குடியேற்ற நிலை” தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்கனவே அறிவிப்பு விடுத்துள்ளார். அதற்கமைய சட்டத்தின் படி தங்கள் குடியேற்ற நிலைமையை காட்டும் ஆவணங்கள் பெற வேண்டியது கட்டயமாக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு ஆவணமின்றி, தற்போதைய குடியிருப்பாளர்கள் தெ...

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த bungee jump

Image
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த  17 வயதான Vera Mol  கடந்த  2015 ஆம்  ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள Cantabria பகுதியில் உள்ள  Cabezon de la Sal  பாலத்தில் இருந்து  bungee jump  ல் ஏற்பட்டுள்ளார். இதில் பாதுகாப்பு கயிறுகளை இணைக்கும் முன்னர், பயிற்றுவிப்பாளரின் கட்டளையை கேட்டு அவர் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் Vera Mol பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணையில், பயிற்றுவிப்பாளரின் மோசமான ஆங்கில உச்சரிப்பே குறித்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவர் குதிக்க வேண்டாம் என ஆங்கிலத்தில் கூறியது இவருக்கு இப்போது குதியுங்கள் என தவறுதலாக கேட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டவரான அந்த பயிற்றுவிப்பாளரின் மிக மோசமான  ஆங்கில உச்சரிப்பே  இளம்பெண்ணின் உயிரைப் பறித்தது என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம்,  18 வயது  நிரம்பாத ஒரு நபரை எப்படி இந்த அபாயகரமான விளையாட்டுக்கு அனுமதித்தனர். எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மட்டுமின்றி ஸ்பெயின் அதிகாரிகளின் உரிய அனுமதியின்றி குறித்த பாலத்தில் இந்த விளையாட்டை சட்டவிரோதமாக நடத்தப்பட்டிரு...

இந்தியா உலக சக்தியாக மாறியது வரவேற்கத்தக்கது:மார்க் ரூட்டி

Image
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டி  பேசுகையில், இந்தியா உலக சக்தியாக மாறி வருவது வரவேற்கத்தக்கது; அது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வரவேற்கத்தக்கது .இந்தியா தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற நீடித்த வளர்ச்சி தரும் திட்டங்களை கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.நெதர்லாந்து.இந்தியாவின் இயற்கையான கூட்டாளி என்று கூறிய  பிரதமர் மோடி  அந்நாடு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைய ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.உலகம் ஒன்றையொன்று சார்ந்தது. ஒன்றையொன்று இணைத்துக் கொண்டது. நாங்கள் இரு நாட்டு உறவையும், உலக விவகாரங்களையும் விவாதிக்கவுள்ளோம்.இருநாடுகளுக்கும் இடையிலான உறவு பழைமையானது. எங்களது உறவு வலுவானது. என்றும் பேசினார்.

போக்குவரத்து போலீசாருக்கு கைரேகை பதிவு

Image
நாட்டின் தலைநகர் டில்லி என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். ஆனால், போக்குவரத்து போலீசார் தங்களின் பணியை சரியாக பார்க்காமல், 'டிமிக்கி' காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே அவர்கள் பணியை துவக்கும் முன்பும், பணியை முடிக்கும் போதும், கைரேகையை பதிவு செய்யும், பயோ - மெட்ரிக் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.இதற்காக பயோ - மெட்ரிக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இனி படகு போட்டி

Image
கேரளாவில் ஆண்டுதோறும்  ஆகஸ்ட் மாதம் , இரண்டாவது வாரம் இப்போட்டி நடக்கும் இப்போட்டியை நடத்தும் அமைப்பு,  ஐ.பி.எல்., போல்,  கேரளாவிலும் படகு போட்டியை நடத்தலாம் என மாநில அரசுக்கு யோசனை கூறியது. சுற்றுலாவை மேம்படுத்த இதுபோன்ற போட்டி அவசியம் என்பதால், கேரள மாநில அரசும் இதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்போட்டி நடக்க உள்ளது. இதற்கு,  'கேரளா போட் ரேஸ் லீக் - கே.பி.எல்.,'   என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தங்க தகடு பொருத்தப்பட்ட உலகின் முதல் ஏ.டி.எம்.,

Image
பிரிட்டன் நாட்டை சேர்ந்த  ஷெப்பர்டு பாரோன்  என்பவர் தான் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டுபிடித்தார். உலகின் முதல் ஏ.டி.எம்.,இயந்திரம், வடக்கு லண்டனில், என்பீல்டு என்ற இடத்தில் உள்ள பர்கிலேஸ் வங்கி கிளையில், 1967 ம் ஆண்டு ஜூன், 27 ம் தேதி அமைக்கப்பட்டது.50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்  லண்டன் பர்கிலேஸ் வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இன்று 'மன் கி பாத்' ல் மோடி உரை

Image
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். புறப்படுவதற்கு முன்  டுவிட்டரில்  அவர், ஜூன் 25 காலை 11 மணிக்கு மன் கி பாத்.,ல் உரையாற்றுவேன் என பதிவிட்டுள்ளார். அதன்படி,  ஜூன் மாதத்தின்  கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று  (ஜூன் 25)  வழக்கம் போல் மன் கி பாத் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் மோடி ஆப் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. யூட்யூப்பிலும் இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. மக்கள், மோடி ஆப்ஸ் அல்லது  1922 என்ற  எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தோ தங்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம்: சுந்தர் பிச்சை

Image
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சி.இ.ஓ., சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் அமெரிக்காவை மையமாக வைத்து உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பல பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக உள்ள சுந்தர் பிச்சையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன. எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். . நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம்.இந்தியாவில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம். வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன். '' என கூறினார்.

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி

Image
வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோனால், அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என ரிசர்வ்வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன.வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவானது, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற அடிப்படையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், வங்கிகளில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொருட்களின் உரிமையாளரே பொறுப்பாகும்.லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது, அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றிற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பாகாது. போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ள  நடைமுறை.

கடன் தொல்லையால் பாலியல் தொல்லைக்கு ஆளான 16 வயது சிறுமி

Image
நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில்,  16 வயது சிறுமி  அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் வந்தது. அதன் பேரில்  சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் மற்றும்  குழந்தைகள் திருமண தடுப்பு அதிகாரி ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அது பள்ளம் துறையை சேர்ந்த  ராபர்ட் பெல்லார்மின் (41)   என்பவர் வீடு. உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து அவரை அதிகாரிகள் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கடன் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுவதாக சிறுமியின் பெற்றோரிடம் சொல்லி, அவரை அழைத்து வந்துள்ளார் பெல்லார்மின். பின்னர் திருசெந்தூரில் ஒரு வழிபாட்டு தளத்தில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை இங்கு தங்க வைத்துள்ளார். இதுபற்றி அந்தச் சிறுமி, பணம் தருவதாக தன்னையும் குடும்பத்தையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்....

சலூன் கடை வைத்திருக்கும் நபரிடம் 150 சொகுசு கார்கள்

Image
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடம்பர சலூன் வைத்து தொழில் செய்து வரும் நபர் ஒருவர் சொந்தமாக 150 கார்கள்  வைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள போரிங் மையத்தில் ஆடம்பர சலூன் ஒன்றை நடத்தி வருகிறார் 45 வயதான ரமேஷ் பாபு.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்  விஜய் மல்லையாவுக்கு பின்னர் ,  ரூ.3.2 கோடி மதிப்பில் மெர்சடிஸ் மேபேக் எஸ்600 என்ற வெளிநாட்டு சொகுசு காரை  இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். தனது தொழில் வளர்ச்சி குறித்து பேசிய  ரமேஷ் பாபு, “எனக்கு 9 வயது இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை  10-ம் வகுப்பு  வரை படிக்க வைத்தார். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதில் இருந்தே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, ஒரு சலூனில்  வேலை கிடைத்தது. அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர்,  1994 ஆம் ஆண்டு  சொந்தமாக  சலூன் வைத்தேன் . நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு முதலில் மாருத...

காதலிக்காக 500 கி.மீ ஓடிய நபர்: ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

Image
அமெரிக்காவை சேர்ந்த  Izyaslav Koza(33)  என்ற நபர் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளர். இருவரும் அமெரிக்காவில் தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காதலை ஏற்பதற்கு முன்னர் சுவிட்சர்லாந்து நாட்டில்  ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லை வரை ஓட முடியுமா?   என அப்பெண் கேட்டுள்ளார்.  பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நபர் கடந்த 22-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இத்தாலி எல்லையில் உள்ள Müstair என்ற பகுதியில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.  ஒவ்வொரு நாளும் 50 கி.மீ தூரம்  வரை ஓடியுள்ளார். செல்லும் வழியில் இரவை கழிக்க ஹொட்டல்களில் தங்கியுள்ளார். இதற்கான செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். காதலிக்காக முயற்சியை கைவிடாத அந்நபர் இறுதியாக நேற்று ஜெனிவாவில் உள்ள Chancy என்ற பகுதியை அடைந்து தனது  சாதனையை முடித்துள்ளார் . அதாவது, தனது பயணத்தில் அவர் தொடர்ச்சியாக  500 கி.மீ தூரத்தை ஓடியே கடந்துள்ளார் . இத்தகவலை காதலியிடம் தெரிவித்ததும் அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்...

இரவு நேரங்களில் மட்டும் பல மர்மமான குரல்கள் ஒலிக்கின்ற : கோவில்

Image
உலகில் உள்ள ஒவ்வொரு கோயிலும் அதற்கேற்ப பெருமைகள் மற்றும் சிறப்புக்களை கொண்டு தனித்தன்மையோடு விளங்கும். ஆனால் அவற்றில்  சில மர்மங்கள்  எளிதில் நம்ப முடியாததாகவும், நம்மை அப்படியே வியப்பில் ஆழ்த்துவதாகவும் அமையும். அந்த வகையில்,  400 வருட  பழமை வாய்ந்த கோவிலாக திகழும்  ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி  எனும் கோவில் பீகார் மாநிலத்தில் பக்ஸார் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபட்டால், திரிபுர சுந்தரி, நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோயிலின் முன் வாயில், பக்தர்களை வரவேற்கும் படி மிகுவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி உள்ள இந்த கோவிலில்  இரவு நேரங்களில் மட்டும் பல மர்மமான குரல்கள் ஒலிக்கின்றது  என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். இந்த கோவில் பூசாரிகள், கோவிலின் கருவறையில் இருந்து வரும் இந்த ஒலிகள், தாய் திரிபுர சுந்தரியின் அருள்வாக்கு என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில், அந்த பேச்சு சத்தங்கள் கருவறைக்கு வெளியில் கேட்பதாக கோயிலில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்...

பிரான்ஸ் தலைநகரை சுத்தப்படுத்திய தமிழக இளைஞர்கள்

Image
பாரிசில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும்  தமிழக இளைஞர்கள்  பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து அங்குள்ள  வீதிகளை சுத்தம்  செய்வதோடு மட்டுமல்லாமல்  மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.இதுகுறித்து அங்குள்ள  தமிழ் இளைஞர் ஜே  கூறுகையில், பாரீஸ் நகரின் முக்கிய வீதிகளை சுத்தப்படுத்தவும், மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  பிரான்ஸ் கமலஹாசன்  நற்பணி மன்றம் இயக்கத்தின் தலைவர்  பிரான்சுவா கஸ்தோன்  ஏற்பாடு செய்திருந்தார்.அதன்படி பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து, குப்பைகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் குப்பைகளை அகற்றி அங்குள்ள மக்களிடம் இனி இதுபோல் குப்பைகளை வீசாதீர்கள் என்று கூறி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம் என்று கூறினார்.

சுவிட்சர்லாந்தில் உலக அகதி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

Image
சுவிட்சர்லாந்தில், நிற்வால்டன் மாநிலத்தில்  உலக அகதி தினத்தை  முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.  நிற்வால்டன் மாநிலத்தின் ஸ்ரன்ஸ்  பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் குறித்த அகதிகள் தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல நாடுகளின் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டன. இதன்போது மரக்கறி மற்றும் உணவு பாவனைக்கான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக  இலங்கை நாட்டவரால் இலங்கையின் சுவையுணவு கொத்துரொட்டியும்  விற்பனை செய்யப்பட்டது. சுவிஸ் உட்பட பல நாட்டு மக்களும் இந்த உணவினை மிகவும் விருப்பத்தோடு சுவைத்திருந்தனர்.

புலம்பெயர்ந்த சிறுவர்கள்: அரவணைத்து கொண்ட சுவிஸ் குடும்பம்

Image
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய போது பெற்றோரை பிரிந்த இரண்டு சகோதரர்களை சுவிஸில் வாழும் குடும்பம் ஒன்று தங்களுடன் தங்க வைத்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹமீத் மற்றும் கலீல் மஜிடி  ஆகிய இரு சகோதரர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடந்த வருடம் தங்கள் பெற்றோருடன் வெளியேறினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பெற்றோரை பிரிந்த அவர்கள் சமூக தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சுவிற்சர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். கடந்த வருடம் சுவிற்சர்லாந்துக்கு புலம்பெயர வந்த 1997 சிறுவர்களில் ஹமீத் மற்றும் கலீலும் அடக்கம். கடந்த 2010ல் வெறும் 235 சிறுவர்கள் புலம்பெயர சுவிஸ்க்கு வந்த நிலையில், இது பல மடங்காக கடந்த இரு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. சுவிஸில் உள்ள பல மண்டலங்களில் புலம்பெயரும் சிறுவர்களுக்காக மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், ஹமீத் மற்றும் கலீலை சுவிஸில் வாழும் குடும்பம் தங்கள் வீட்டில் தங்க அனுமதி கொடுத்துள்ளனர். தற்போது சகோதரர்கள் இருவரும் பிரிந்த தங்களின் பெற்றோரை கண்டுபிடித்து அவர்களுடன் போன் ம...

விஷமுள்ள பாம்புகளிடம் அன்பாக பழகி வரும் பெண்

Image
கொடிய விஷமுள்ள  பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி , அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார்   கார்க்கி விஜயராகவன்   என்ற பெண். மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். காடுகளில் இருந்து ஊர்களுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாத்து, அவைகளுக்கு நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துஅவற்றை மீண்டும் காட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கிறார். கடந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட  2000 பாம்புகள்  வரை இவரால் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. சென்னையில் வங்கியொன்றில் வேலை பார்த்த  சமயங்களில் தனது மதிய உணவுப் பொழுதினை முதலைப் பண்ணையில் இருக்கும்  பாம்புகளிடையேதான் செலவிடுவாராம் . இப்படித் துவங்கிய பாம்புகளின் மீதான அவரது ஈடுபாடு என்னையும் தொற்றிக் கொண்டது. சின்ன வயதிலிருந்தே பாம்புகளுடன் எனக்கு நட்புணர்வு ஏற்பட்டது. இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவையெல்லாம் எந்த ஆபத்தும் விளைவிக்காது. பாம்புகளை...

நாடாளுமன்றத்தில் பாலூாட்டிய முதல் பெண்!

Image
பெண்கள் குழந்தைகளுக்கு  பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். ஆனால்  அவுஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ்  செயல் இதற்கு மாறாக அமைந்துள்ளது. ஜூன்  22ம் தேதி   அவுஸ்திரேலிய  நாடாளுமன்ற கூட்டத்தில்  பங்கேற்ற  வாட்டர்ஸ்  தன்னுடைய  2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு  பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே   தீர்மானம் ஒன்றை தாக்கல்  செய்து அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.வாட்டர்ஸ் போன்று அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் இது போன்று துணிச்சலான செயலை செய்துள்ளதை பெண்கள் தங்களுக்கான உத்வேகமாக நினைக்க வேண்டியுள்ளது. பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவரை நினைத்து நம் பிள்ளைக்கு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டுமா என்றும் வாட்டர்ஸ் கேள்வி எழுப்புகிறார். நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய  முதல் அரசியல்வாதி  என்ற பெயரை பெற்றுள்ளார்.  கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்ப...

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்:அமெரிக்க எம்.பி.,க்கள்

Image
அமெரிக்க பார்லிமென்ட்டில், குடியரசு கட்சியை சேர்ந்த,  எம்.பி., டெட் போயி,   மற்றும்  ஜனநாயக கட்சி, எம்.பி., ரிக் நொலன்  ஆகியோர் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்க, அமெரிக்க அரசின் சார்பில் பாகிஸ்தானுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் , 2002ல், பாகிஸ்தானை, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். இந்த அந்தஸ்து பெற்றதன் மூலம், அந்த நாட்டிற்கு பெருமளவு ஆயுத சப்ளையும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க வழங்கப்படும் நிதியை, பாகிஸ்தான் முறையாக பயன்படுத்தவில்லை. எனவே, 15 ஆண்டுகளாக, பாகிஸ்தானுக்கு நிதி வழங்கியதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும். அந்த நாட்டிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

'பேஸ்புக்'கில் புதிய வசதி முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு

Image
கடந்த ஆண்டு இடது ஜனநாயக முன்னணி அரசு வெற்றி பெற்று  பினராயி விஜயன் முதல்வராக  பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்கள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வருகிறார்.பேஸ்புக் சமூகதளத்தில், பயனாளி ஒருவரது புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வசதி இருந்தது.  அவ்வாறு  ஒருவரது படத்தை, மற்றவர்கள் பயன்படுத்த முடியாத  புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு,  முதல்வர் பினராயி விஜயன்  பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிஉள்ளதாவது:சமூகதளங்களை பயன்படுத்துவோர், குறிப்பாக பெண்களின் நலனுக்காக, இந்த புதிய வசதியை,  பேஸ்புக் நிறுவனம்  நம் நாட்டில் துவக்கியுள்ளது; இது பாராட்டுக்குரிய விஷயம். மற்ற சமூகதளங்களும், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த காதலன்: வீட்டிற்கு அழைத்து காதலி செய்த செயல்

Image
  டெல்லி மங்கள்புரி  பகுதியை சேர்ந்தவர்   ரவி(35) . இவர் இளம் பெண் ஒருவரை நான்கு வருடங்களாக  காதலித்து  வந்துள்ளார். ஆனால் அவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் இல்லை.இந்நிலையில் ரவிக்கு தொடர்பு கொண்ட அப்பெண்ணின் உறவினர் ஒருவர் உடனடியாக  வீட்டிற்கு வரும் படி  கூறியுள்ளார். இதனால் அங்கு சென்ற  ரவியிடம், காதலி தன்னை திருமணம் செய்து  கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரோ நம் காதலை பற்றி தன்னுடைய வீட்டில் பேசினேன், திருமணம் செய்து வைக்குமாறு கூறினேன். ஆனால்  தங்கள் வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை  என்று கூறியுள்ளார். இதனால்  கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண்  உடனடியாக அவரை அருகில் இருந்த  குளியலறைக்குள் தள்ளி, அவரின் மர்ம உறுப்பை கத்தியை வைத்து வெட்டியுள்ளார்.  இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளான அவர் வலி தாங்காமுடியாமல் வெளியில் ஓடி வந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தை அறிந்த பொலிசார்  அப்பெண்...

குட்டை பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

Image
பிரித்தானியாவில் சமீப காலமாக நிலவி வரும் வெப்ப நிலை காரணமாக  Isca Academy  பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை பள்ளி மாணவர்கள் பேன்டிற்கு பதிலாக அரைகால் டவுசர் அணிய பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சுமார்   30-க்கும் மேற்பட்டோர்   கடந்த வியாழக்கிழமை  குட்டைப் பாவாடை  அணிந்து பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு தண்டனையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில்,  அரை கால் டவுசர்கள் எங்களது பள்ளி சீருடையில் அனுமதிக்கப்படுவதில்லை .  இது தொடர்பாக மாணவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமும் பேச இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாணவர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மனைவி வேண்டும்: மரத்தின் மீது ஏறி அடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

Image
தேனி மாவட்டம்‌ போடியில்  பிரிந்து சென்ற  தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி  மரத்தின் மீதேறிய ஆட்டோ ஓட்டுநர் விஜி என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென தற்கொ‌லை‌ மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போடியில்,  பெரியாண்‌டவர் கோயில் முன்புறம்  உள்ள  மரத்தின் உச்சியில்  ஏறி போராட்டம் நடத்திய அவரிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்த விஜியை  தீயணைப்புத்துறையினர் ஏணி மூலம் கீழே இறக்கினர்.  அதையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் விஜியை போலீசார் கைது செய்தனர்.