இந்தியா உலக சக்தியாக மாறியது வரவேற்கத்தக்கது:மார்க் ரூட்டி
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டி பேசுகையில், இந்தியா உலக சக்தியாக மாறி வருவது வரவேற்கத்தக்கது; அது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வரவேற்கத்தக்கது .இந்தியா தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற நீடித்த வளர்ச்சி தரும் திட்டங்களை கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.நெதர்லாந்து.இந்தியாவின் இயற்கையான கூட்டாளி என்று கூறிய பிரதமர் மோடி அந்நாடு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைய ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.உலகம் ஒன்றையொன்று சார்ந்தது. ஒன்றையொன்று இணைத்துக் கொண்டது. நாங்கள் இரு நாட்டு உறவையும், உலக விவகாரங்களையும் விவாதிக்கவுள்ளோம்.இருநாடுகளுக்கும் இடையிலான உறவு பழைமையானது. எங்களது உறவு வலுவானது. என்றும் பேசினார்.

Comments
Post a Comment