பிரித்தானிய கடலில் மூழ்கி ஐவர் பலி - விசாரணைகள் தீவிரம்


பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி பலியான தமிழர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.  உயிரிழந்தவர்களில் சகோதரர்கள் இருவர் உட்பட ஐவர் உள்ளடங்குகின்றனர். 2 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ,22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும். உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். எனினும் இரண்டு சகோதரர்களும் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதென உயிரிழந்தவர்களின் குடும்ப வழக்கறிஞர் Patrick Roche தெரிவித்துள்ளார்.உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எனவும் தந்தை ஆறுமுகம் சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் ஐவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்