பெங்காலி பாரம்பரியத்தில் சேலை கட்டி பொட்டு வைத்த நடிகைக்கு வந்த சோதனை
பாலிவுட் நடிகை சோஹா அலிகான் பெங்காலி பாரம்பரியத்தில் சேலை கட்டி பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிருந்தார். 38 வயதான அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பிங்க் நிற சேலைகட்டி தனது கணவர் குணால் கேமுவுடன் போஸ் கொடுத்திருந்தார். அந்தப்புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் பலர் ‘சோஹா அலிகான் உண்மையான இஸ்லாமியர் அல்ல’ என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஈகை பண்டிகையை ஒட்டி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஈகை பண்டிகையின் போது இஸ்லாமிய பெண்கள் சேலை அணிய மாட்டார்கள்.சோஹா அலிகானை இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளக் கூடாது, அவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என ட்விட்டர்களில் பலர் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment