துரியோதனன் ஆலயம்
துரியோதனன் ஆலயம் துரியோதனன் ஆலயம்
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குன்னத்தூர் வட்டம், பொருவழி எனும் கிராமத்தில், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கோவில். பொருவழி எனுமிடத்தில் துரியோதனனுக்குத் தனிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.பாண்டவர்களைத் தேடிப் பல்வேறு காடுகளின் வழியாகப் பயணித்து வந்த துரியோதனன், தென்பகுதியிலிருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்கு அதிக தூரம் நடந்து வந்த களைப்பால் தாகம் ஏற்பட்டது. தாகத்தைத் தணிக்க தண்ணீரைத் தேடினான். சிறிது தொலைவில், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி ஒன்று இருப்பது தெரிந்தது. அந்தக் குடியிருப்பு பகுதியை நோக்கிச் சென்றான் துரியோதனன்.சென்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட குரவா வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பாக போய் நின்ற துரியோதனன், குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டான்.
வீட்டில் இருந்தவர் தண்ணீர் தர மறுத்தார்கள். துரியோதனன், வீடு தேடி வந்து தாகத்திற்காக தண்ணீர் கேட்பவருக்கு, இல்லை என்று கூறுவது சரியாகுமா?’ என்று கேட்டான்.தங்களைப் பார்த்தால் உயர்ந்த வகுப்பினர் போல் தெரிகிறது. உயர் வகுப்பினருக்குத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த நான் தண்ணீர் கொடுத்தால், எனக்குத் தண்டனை கிடைக்கும்’ என்றான்.
நான் அஸ்தினாபுரத்து அரசன். எனக்கு இந்த வேளையில் தாங்கள் கொடுக்கும் தண்ணீரே என் உயிரைக் காக்கும். எனக்கு ஏற்பட்டிருக்கும் தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் தந்து உதவுங்கள். இந்தப் பகுதி என்னுடைய பேரரசின் கீழ் செயல்படும் குறுநில மன்னர்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவையானது கிடைக்கவும் நான் உதவுகிறேன்’ என்றான் துரியோதனன்.
ஒரு குடுவையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான் . தண்ணீர் தாகத்தில் இருந்த துரியோதனன், அந்தக் குடுவையில் இருந்ததை முழுமையாகக் குடித்து முடித்தான். அவன் குடித்து முடித்த பின்புதான், அவனுக்குத் தான் குடித்தது தண்ணீர் இல்லை என்பதும், அது புளித்துப் போன கள் எனும் பானம் என தெரிந்தது. மகிழ்ச்சி அடைந்த துரியோதனன் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்????
இங்கு இறைவன் வழிபாட்டுக்குத் தனியாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினான். அதற்குச் சம்மதித்த துரியோதனன், அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்ததுடன், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.அப்பகுதி மக்கள் கோவிலை கட்டிவிட்டு அதற்கு கடவுள் சிலை ஏதும் வைக்காமல் துரியோதனனையே நினைத்து வழிபட முடிவு செய்தனர் என்கிறது தல வரலாறு.
மலக்குடா மகோத்சவம் பெருவிழா:
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், ‘மலக்குடா மகோத்சவம்’ நடக் கிறது. இக்கோவிலின் ஊராளி எனப்படும் வழிபாட்டுப் பணி செய்பவர் பயன்படுத்தும் குடையைக் குறிப்பிடும் வகையில், இந்த விழாவை ‘மலக்குடா மகோத்சவம்’ என்கின்றனர். இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கோவில் வழிபாட்டுப் பணியைச் செய்பவரும், அவருடைய பணிக்கு உதவியாக இருப்பவர்களும், இந்த ஆலயத்தின் துணைக்கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருக்கள்சேரி பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அம்மனை விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளும் அம்மன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, மலநடா கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் மண்ட பத்தில் வந்து அமர்ந்து, திருவிழாவை காண்பதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்குகிறார்.

Comments
Post a Comment