உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம்
உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படுகிறது.கலை பொக்கிஷம் என்று அழைக்கப்படும் 'அங்கோர் வாட்' ஆலயத்தை, தமிழ் மன்னர் ஆகிய இரண்டாம் சூரியவர்மன் மன்னனையேச் சாரும். போரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை, வைணவக் கோவிலாக மாற்றியிருக்கிறார்.சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தக் கோவிலானது அமைக்கப்பட்டுள்ளது.பன்னிரண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடப் பணி நிறைவு பெறுவதற்கு, 27 ஆண்டு கள் ஆகியிருக்கிறது. இந்த ஆலயம் கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்து விட்டார். அதன்பிறகு ஆறாம் ‘ஜெயவர்மன்’ ஆட்சிக்கு வந்த பிறகு, புத்தக் கோவிலாக மாற்றம் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இன்றுவரை இது புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு, கம்போடிய தேசியக்கொடியில் ‘அங்கோர் வாட்’ கோவிலை பொறித்துள்ளது. எந்த ஒரு கேமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது என்பதே, இந்த ஆலயத்தின் பிரமாண்டத்தை பறைசாற்றும். இந்தக் கோவிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம். திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதுபோன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என சில பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம், தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர், நடனமாடும் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவரின் வெளிப்புறத்தில் தூண்களோடு கூடிய பல கணிகள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் மீது அமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன.கடந்த 200 ஆண்டுகளாக வழி பாடின்றி இருக்கிறது. தற்பொழுது திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் இருக்க வேண்டிய சுவாமி சிலைகள் இப்போது காட்சியகத்தில் இருக்கின்றன.

Comments
Post a Comment