சீன அதிபரை கவர்ந்த ‛‛தங்கல்'' படம்
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த ‛‛தங்கல்'' படம் சீனாவிலும் ரிலீசாகி ரூ. 1,100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடந்து வருகிறது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தார். இதில் சீன அதிபரை ஜி-ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து கை குலுக்கினார். அப்போது சீனாவில் வெளியான உங்கள் நாட்டின் ‛‛தங்கல்'' என்ற திரைப்படம் பார்த்தேன் படம் பிரமாதமாக இருக்கு. எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்ற கூறினார்.

Comments
Post a Comment