Posts

Showing posts from August, 2017

'நதிகளை மீட்போம்' , ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

Image
'நதிகளை மீட்போம்' , ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் 'நதிகளை மீட்போம்'  அமைப்பினர், நதிகளை மீட்பதின் அவசியம் குழித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள நதிகளை மீட்டு, மீண்டும் அவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடவும், அதனால், அப்பகுதிகளில் உள்ள நாகரிகம், பண்பாடு கலாசாரம் காப்பாற்றும் நோக்கத்தில் இணைந்த தன்னார்வலர்கள், 'நதிகளை மீட்போம்' என்ற, இயக்கத்தை துவக்கி உள்ளனர்.  அவ்வியக்கத்தில் உள்ள, மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பெரு நிறுவன பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள், இன்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, தமிழகம் முழுவதும், முக்கிய சாலைகளில் கூடி, புதுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.நதிகளை மீட்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தன்னார்வலர்களும் கலந்து கொள்ளலாம்.  அதற்கான படத்தை, rallyforriver.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர்,  80009 80009  என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொட...

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி

Image
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி தமிழ் திரையுலகில் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்யும் நிலைமையில் உள்ள ஒரே  நடிகர் விஜய்சேதுபதிதான் . தற்போது புரியாத புதிர், கருப்பன், என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.  இந்த நிலையில் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவு  மணிரத்னம் இயக்கத்தில்  ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவும் விஜய்சேதுபதிக்கு நனவாகியது. ஆம், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிதான் முக்கிய வேடம். மணிரத்தினம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்று கூறி அவர்களுடைய பெயரையும் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத, மயங்காத விஜய்சேதுபதி என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்' என்று கூலாக கூறினாராம்.

அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆத்மிகா!

Image
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆத்மிகா! கார்த்திக் நரேன் இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. இந்த படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரணும் நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோவாக சுந்தீப் கிஷண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதி ஜோடியாக நடித்தவர்.இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

செப்., 2ல் சபரிமலை நடை திறப்பு

Image
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் சிறப்பு வழிபாடு செப்., 2ல் நடக்க இருக்கிறது. பூஜையொட்டி செப்., 2ல் மாலை, 5:00 மணிக்கு நடை  திறப்படுகிறது.3ம் தேதி முதல், நான்கு நாட்கள் ஓண விருந்து நடக்கிறது. செப்., 2ல், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் நடக்காது. செப்., 3 முதல் நெய் அபி-ஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கும்.களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை ஆகியவை, ஓண கால பூஜையின் முக்கிய அம்சங்கள். செப்., 3 முதல், 6ம் தேதி வரை, மதியத்தில் களப பூஜை, செப்., 4 முதல், 6 வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கும். செப்., 6 வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடக்கிறது.6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

டில்லியில் விவசாயிகள் மாநாடு

Image
டில்லியில் விவசாயிகள் மாநாடு இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட தேசிய அளவிலான விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து டில்லியில் விவசாயிகள் மாநாட்டை செப்., 15ல், நடத்த உள்ளன.சாமிநாதன் கமிட்டி அறிக்கைப்படி, அனைத்து வகை பயிர்களுக்கும், அதன் உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் கூடுதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.  அரசின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னை குறித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன்

Image
கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் ஆல்ஃபா ஒன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் லம்போர்கினி நிறுவனம் ரூ.4 லட்சம் விலையில் 88 தவ்ரி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. லம்போர்கினியின் இந்த ஸ்மார்ட்போன் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நீர்ம உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்: *5.5 அங்குல WQHD டச் ஸ்கிரீன் பெற்றிருக்கிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. *4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டிக்கலாம். *20 மெகா பிக்சல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் பெற்றுள்ளது. *ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் சிம் கார்டு வசதி, 3,250 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இந்திய மதிப்பில்  ரூ.1.5 லட்சம்  என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மனைவியுடன் கணவன் கட்டாய உறவு ,தவறு இல்லை : மத்திய அரசு WRITTEN BY THEMALAR

Image
மனைவியுடன் கணவன் கட்டாய உறவு ,தவறு இல்லை : மத்திய அரசு பெண்களுக்கு சார்பாக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மோனிகா அரோரா என்பவர், கணவன் மனைவியுடன் கட்டாயமாக உறவு வைப்பதை குற்றமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட் விசாரித்தபோது , மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவர்களுக்கு கல்யாணம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும். இதனை எதிர்த்து ஆண்கள் சங்கம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அதில், 375வது பிரிவு சட்டப்படி, கணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்கினால், அப்பாவி கணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு என பொய் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மனைவியுடன் கட்டாய உறவு வைப்பதை குற்றமாக அறிவிக்கும் திட்டமில்லை. மனைவியுடன் கணவன் கட்டாய உறவு வைப்பதை குற்றம் என சட்டமாக்கினால், அது திருமண பந்தம் சீர்குலைப்புக்கும், கணவர்களை துன்புறுத்துவதற்கும் பயன்படும். இவ்வாறு அதில் கூறப்...

புளுவேல் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

Image
தமிழகம் , மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி  பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார்.  வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று எழுதியிருப்பதை கண்டறிந்தனர். 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

சொகுசு கார் வரி உயர்வு

Image
சொகுசு கார் வரி உயர்வு ஜிஎஸ்டி.,யின் கீழ் அனைத்து கார்களுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1500 சிசி.,க்கும் அதிகமான திறனுடைய இன்ஜின்களை கொண்ட கார்கள், 4 மீட்டருக்கு அதிகமான நீளமுடைய எஸ்யுவி கார்களுக்கு ஜிஎஸ்டி.,யுடன் கூடுதலா 15 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது செஸ் வரியை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.மத்திய அரசின் இந்த முடிவால் , விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக கார்களின் விலையை குறைத்து வந்தன. , தற்போது  கார் நிறுவனங்கள் தங்களின் சலுகை அறிவிப்புக்களை திரும்பப் பெறும் நிலை உருவாகி உள்ளது.

புளுவேல் விளையாட்டு விளையாடினாள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் ?

Image
புளுவேல் விளையாட்டு விளையாடினாள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் ? 'புளூவேல்'  கேம் என்றால் 50 நாள்  'சேலேன்ஜ் கேம்'  ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது.  போனில் 'இன்ஸ்டால்'  செய்ததும் விளையாடலாம்.  விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக  'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி , அதை போட்டோ எடுத்து அனுப்பு.  அதிகாலை எழுந்து பேய் படம் பார்,  அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு.   ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்.  அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.  இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று  சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த  'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும்,  உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் ...

தலைவன் வருகிறான்' பட இசை வெளியிடும் ஆர்யா

Image
தலைவன் வருகிறான்' பட இசை வெளியிடும் ஆர்யா நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நடிக்கும் 'தலைவன் வருகிறான்' படத்தின் தலைவன் வருகிறான்’ என்ற விஷால் பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை நடிகர் ஆர்யா இன்று வெளியிட இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை  முருகன் மந்திரம்  எழுதியுள்ளார். பத்திரிக்கையாளர்  ராஜிவ் காந்தி  இயக்கியுள்ளார்.  இஷான் தேவ்  இசையமைத்துள்ளார்.  குணா கார்த்தி க் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இப்பாடலை இன்று இரவு 10 மணியளவில் ஆர்யா வெளியிட இருக்கிறார். சமீபத்தில் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படும் சினிமா மற்றும் பத்திரிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன்’ ஆசை இல்லை : ஆத்மிகா

Image
நம்பர் ஒன்’ ஆசை இல்லை : ஆத்மிகா மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர்  ஆத்மிகா . பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர், நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். முறைப்படி நடனம், பாட்டு, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் படித்திருக்கிறார். ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார். சினிமா ஆர்வம் பற்றி அவர் கூறியது: ‘நான் நடிக்க விரும்பினேன். பெற்றோர் அதை அனுமதித்தது பெரிய வி‌ஷயம். சினிமாவில் நடிக்கும் ஆசையால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து என்னை தயார் படுத்திக் கொண்டேன். நான் நடித்திருந்த குறும்படத்தை பார்த்து தான் ஆதி, என்னை ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடிக்க வைத்தார். குறும்படத்தில் நடித்து பயிற்சி பெற்று இருந்ததால் தான், ஆதி வைத்த நடிப்பு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும்.

சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி

Image
சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ரெடியாகி அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவற்றில் முதல் படமாக சர்வர் சுந்தரம் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம்.இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்ததன் மூலம் சந்தானத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது தேனாண்டாள் பிலிம்ஸ்தான். இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

ஹன்சிகா கேரக்டரில் நடிக்கும் கேத்ரின் தெரேசா

Image
ஹன்சிகா கேரக்டரில் நடிக்கும் கேத்ரின் தெரேசா தமிழில் ஹன்சிகா நடித்த கேரக்டரில், தெலுங்கில்  கேத்ரின் தெரேசா  நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.‘தனி ஒருவன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இந்தப் படத்தில், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் லட்சுமணன். ஜெயம் ரவி நடித்த கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். ஹீரோயினாக கேத்ரின் தெரேசா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அரவிந்த் சாமி கேரக்டரில் அவரே நடிக்கிறாரா இல்லை வெறொரு நடிகர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் சமந்தா

Image
நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் சமந்தா திருமணத்துக்குப் பின் சமந்தா நடிக்கும் முதல் படத்தில், அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்கிறார்.சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்குள் தன் கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட பரபரப்பாக உழைத்து வருகிறார் சமந்தா. திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி வேறு எழுந்தது. இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவர் நிச்சயம் நடிப்பார் என்ற செய்தி உண்மையாகியிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் சமந்தா. மாருதி இயக்கும் இந்தப் படத்தில், நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘மனம்’ உள்ளிட்ட சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கும் அமீர்

Image
எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கும் அமீர் ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகிவரும் படம்  ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’.  இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அமீர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். அதனால், தன் பெயரான பாண்டியனுடன் எம்.ஜி.ஆரை சேர்த்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என அழைக்கப்படுகிறார். அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ஆனந்த்ராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  தற்போது ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்துக் கொண்டிருப்பதால், இந்தப் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. ‘வடசென்னை’ முடிந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தேனியில் நடைபெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் மூடப்படவுள்ள பிரபல உணவகம்

Image
பிரித்தானியாவில் மூடப்படவுள்ள பிரபல உணவகம் பிரித்தானியாவில் உள்ள உணவகத்தில் பணி புரிய சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் தேதி அன்று காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டது. உரிமம் இல்லாத  இரண்டு இலங்கையர்கள்  இந்த உணவகத்தில்  பணி புரிவதை பார்த்துள்ளனர்.இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், அவர் பல வாரங்கள் அங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மற்றவர் அங்கு ஒரு வருடம் வேலை செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் கைது செய்யப்பட்டு  விசாரணையில் உள்ளனர். இந்த உணவகத்தையும் மூடியுள்ளனர்.

புதிய வாகனம் விற்க தடை

Image
புதிய வாகனம் விற்க தடை போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி கூறியதாவது:  லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு உத்தரவு விட்டுள்ளார்,தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.   அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 'விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார்.  இந்த ஆண்டு மட்டும் 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன; அவற்றில்,  9,881 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆகையால், மோட்டார் வாகன சட்டங்களின் படி, வாகன விற்பனையாளர்கள், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாதோருக்கு, வாகனங்களை விற்கக்கூடாது. அவ்வாறு விற்றால், விற்பவர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.

சீன பட்டாசு மீது நடவடிக்கை

Image
சீன பட்டாசு மீது நடவடிக்கை தீபாவளி பண்டிகைக்காக டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆச்சர்யம் அடைந்த  நீதிபதிகள்  'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டில்லியில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது'  என்றனர். சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜன்தன் திட்டத்தால் மக்களின் விருப்பங்களை நிறைவேறும் : மோடி

Image
ஜன்தன் திட்டத்தால் மக்களின் விருப்பங்களை நிறைவேறும் : மோடி பிரதமர், நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, ஜன்தன வங்கி கணக்கு துவங்கி, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:ஜன்தன் திட்டம் துவங்கி, மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தால் பயனடைந்துள்ள, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.ஏழைகள், ஒடுக்கப்பட்டோரை, நிதி நீரோட்டத்தில் இணைப்பதை, இத்திட்டம் சாத்தியமாக்கி உள்ளது.ஜன்தன் திட்டத்தால், நாட்டில், கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்கள் நிறைவேறும் வகையில், மத்திய அரசு, சிறகுகளை அளித்துள்ளது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெக்சாஸ் செல்கிறார் டிரம்ப்

Image
டெக்சாஸ் மாகாணத்தில்  ‛ஹார்வி' புயல்  பாதித்த பகுதிகளை ஆய்வு  செல்வதற்காக டிரம்ப் இன்று டெக்சாஸ் செல்கிறார்.டெக்சாஸ் மாகாணத்தில் ‛ஹார்வி' புயல்  கரையை கடந்தபோது, டெக்சாஸ் மாகாணத்தில், கடலோரத்தில் அமைந்துள்ள, 10க்கும் மேற்பட்ட நகரங்களில், கடும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  50 லட்சம் பேர், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் மூடப்பட்டன. அமெரிக்காவின் மிகப் பெரிய பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி மையமான, ஹூஸ்டன் நகரிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் ‛ஹார்வி' புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செல்வதற்காக டிரம்ப் செல்கிறார்.

அரியானா சாமியாருக்கு 20 ஆண்டு சிறை

Image
அரியானா , பஞ்சாப் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றவர் ராம்ரஹீம்.இவர் இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, வன்முறை கோர தாண்டவமாடியது. இதில் 36 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  இவருக்கான தண்டனையை சி.பி.ஐ.,சிறப்பு நீதிபதி இன்று அறிவித்தார். சாமியாரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் பதட்டம் ஏற்படும் என்பதால் நீதிபதி , ரோதக்கில் உள்ள சிறைக்கு சென்று தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது சாமியார் கண்ணீர் விட்டு அழுதார்.அரியானாவில் உள்ள தேரா சச்சா சவுத்தா அமைப்பின் தலைவரான சாமியார் ராம்ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத சாமியார் , கோர்ட்டை விட்டு வெளியேற மறுத்தார். என் மீது கருணை காட்டுங்கள் என நீதிபதியிடம் கெஞ்சினார். ஆனால் போலீசார் மற்றும் சிறைக்காவலர்கள் சாமியாரை தரையில் தர, தரவென இழுத்து சென்றனர்.

டோக்லம் எல்லை பகுதியில் ராணுவம் வாபஸ்

Image
டோக்லம் எல்லை பகுதியில் ராணுவம் வாபஸ் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது :  டோக்லம் பகுதியில் கடந்த, 70 நாட்களாக இரு நாடுகளின் சார்பிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளின் சார்பில் தூதரக ரீதியாக டோக்லம் பிரச்னை குறித்து பேசப்பட்டது. அப்போது இரு தரப்பு கருத்துக்கள், கவலைகள், விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து டோக்லம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கூடுதல் படைகளை வாபஸ் பெறுவது என இரண்டு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’

Image
நயன்தாரா பெண்களை மையப்படுத்தும் கதைகளாக தேடிப்பிடித்து நடித்துவரும் நயன்தாரா, அடுத்ததாகவும் அதேபோன்ற ஒரு கதையில் தான் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு, ‘கோலமாவு கோகிலா அலைஸ் கோகோ’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயன்தாரா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் அனிருத். இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அக்ஷராவின் நடிப்பை புகழ்ந்து ட்வீட் செய்த விவேக் ஓபராய்

Image
அக்ஷராவின் நடிப்பை புகழ்ந்து ட்வீட் செய்த விவேக் ஓபராய் விவேகம் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துவரும் இப்படம், பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் விவேக் ஓபராய், அட்டகாசமாக நடித்துள்ளதாக அக்ஷரா ஹாசனைப் புகழ்ந்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். படத்தில் அவர் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றாலும் தனது கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.  விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பதிவில், விவேகம் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளோம். உங்களின் சிறப்பான நடிப்பிற்குப் பாராட்டுகள். திரையில் உங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்மால் பாம், பிக் ப்ளாஸ்ட் என அக்ஷராவை அவர் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

‘இறைவி’ என கடைக்குப் பெயர்வைத்த விஜய் சேதுபதியின் சகோதரி

Image
‘இறைவி’ என கடைக்குப் பெயர்வைத்த விஜய் சேதுபதியின் சகோதரி விஜய் சேதுபதியின் சகோதரி, தான் புதிதாகத் தொடங்க உள்ள கடைக்கு ‘இறைவி’ எனப் பெயர் சூட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் சகோதரி ஜெயஸ்ரீ, தாம்பரம் அருகிலுள்ள செம்பாக்கத்தில் துணிக்கடை ஒன்றைத் தொடங்கப் போகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள் கிடைக்கும் இந்தக் கடைக்கு, ‘இறைவி’ எனப் பெயர் வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இந்தக் கடை திறப்பு விழா காணப் போகிறது.

சீன ராணுவ படைக்கு தகுதி பெற பலவிதமான கட்டுப்பாடுகள்

Image
சீன ராணுவ படைக்கு தகுதி பெற பலவிதமான கட்டுப்பாடுகள் சீன ராணுவப் படையில் சேர்வதற்குத் தகுதி பெற , பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீன அரசு.அதிக அளவில் செயற்கை பானங்கள் உட்கொள்ளுதல், கணினி விளையாட்டு விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் சுய இன்பம் ஆகிய காரணங்கள்தான் இளம் வயதினரின் ஆரோக்கியம் கெட்டுப்போக முக்கிய காரணம் என சீன ராணுவம் தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது. ராணுவத்திற்கான உடல்தகுதி தேர்வில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோல்வியடைவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்திற்கு ஆள் கிடைப்பது சீனாவில் மிகவும் சிரமமாகியுள்ளது. *செயற்கை பானங்கள் மற்றும் மது அருந்துதல் கூடாது  *மின்னணு திரைக்கு முன் அதிக நேரம் செலவிடக்கூடாது *சுய இன்பத்திற்கு தடை *உடலில் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது என பல விதிகளை விதித்துள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள்: பிரதமர்

Image
புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள்: பிரதமர் ஒவ்வொரு அமைச்சகங்களில் முதன்மை நிலை மற்றும் செயலாளர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். பணிகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்ற விதம் தொடர்பாக அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.அடுத்தடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிரதமர் பிறப்பித்து வருகிறார். வேளாண்மை, குடிநீர், கல்வி, உற்பத்தி உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு, சோலார் சக்தி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் தெளிவான கொள்கையுடன் உழையுங்கள் என அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பெண் கலெக்டருக்கு சிலை : தெலங்கானா

Image
பெண் கலெக்டருக்கு சிலை : தெலங்கானா தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட பெண் ஆட்சியர் ஆம்ராபலி கதா(35) இளைய தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமானவர். இளைஞர்களை உற்சாகப்படுத்த அவர் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.   இந்நிலையில் வாரங்கல் நகரின் காசியாபாத் பகுதியில் இளைஞர்கள் சிலர் அவருக்கு சிலை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிப்படுவது வழக்கம். ஆனால் இந்த இளைஞர்கள் பார்வதி கையில் விநாயகர் இருப்பது போல ஆம்ராபலி கதா கையில் விநாயகர் இருப்பது போல சிலை அமைத்துள்ளனர்.ஆட்சியர் அந்த இளைஞர்களை அழைத்து கண்டித்துள்ளார். பின் அந்த இளைஞர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிலையின் முகத்தில் கறுப்பு மையை பூசினர்.

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்

Image
ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் தான். ஃபேஸ்புக் அளவிற்கு டுவிட்டர் லாபகரமாக இல்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று திடீரென ஃபேஸ்புக் சில மணி நேரம் நிலை தடுமாறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் நுழைய முடியாமல் அதன் பயனாளிகள் தவித்தனர். ஃபேஸ்புக் முடங்கியதற்கு என்ன காரணம் என்று டுவிட்டரில் அனைவரும் கேள்வி கேட்டனர். இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன உரிமையாளர்  மார்க் ஜூக்கர்பெர்க்  தனது டுவிட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் இணையதளத்தில் சிறு தடங்களில் உள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் ஃபேஸ்புக் சேவை தொடரும் என்று செய்தி வெளியிட்டிருந்தார். ஃபேஸ்புக் உரிமையாளர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது.

பான்கார்ட் மற்றும் ஆதார் இணைப்பு 31ம் தேதி வரை அவகாசம்

Image
வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.  ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி,  அஜய் பூஷண் பாண்டே , நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.

இந்திய பயணத்தை தவிர்க்க சீனர்களுக்கு அரசு கோரிக்கை

Image
டோக்லாம் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் போர் தொடுக்கும் அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது; இந்தியாவும், அங்கு, படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக, இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கு இடையே தொடர் பதற்றம் நிலவுவதால், கடந்த மாதம், 8ம் தேதி, இந்தியா செல்லும் சீன மக்களுக்கு, அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக, மக்களுக்கு, சீன அரசு, பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.  சீன அரசு நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இந்தியா செல்லும் சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் இயற்கை பேரிடர், சாலை விபத்து, தொற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதால், இந்தியா செல்வதை, சீனர்கள் தவிர்க்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய பயணத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி டாக்டர்

Image
போலி டாக்டர் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, பயிற்சியை பாதியிலேயே கைவிட்ட சிலர், பின் இறந்தவர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று டாக்டர்களாக இருப்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில் வேல்முருகன், அனில் குமார் மற்றும் குமரனை போலீசார் கைது செய்தனர். ஹோமியோபதி கவுன்சிலின் முன்னாள் பொறுப்பில் இருந்தவர்களுக்கு இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.40 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன

ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே குறி :தமிழிசை

Image
ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே குறி :தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  தமிழிசை  தெரிவித்ததாவது: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மத்திய அரசையும், கவர்னரையும் குறை கூறுவதிலேயே இருக்கிறார். எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறார்.  தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல. அரசுக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும். எந்த நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Nainital Bank ல் Management Trainee வேலை

Image
Nainital Bank ல் Management Trainee வேலை   வேலை வாய்ப்பு Nainital Bank ல் Management Trainee வேலைக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 31.07.2017 வரை 21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST வகுப்பினருக்கு 5 வருட வயது வரம்பு உண்டு. விண்ணப்பிக்கும் அனைவரும் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  பதிவு கட்டணம்:   ரூ.850 மற்றும் 18% வரியுடன் ரூ.153  மொத்தம்  ரூ.1003 /-   செலுத்த வேண்டும். திரும்ப பெற இயலாது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.nainitalbank.co.in – என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் .

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி

Image
தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்? உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா? அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற விரும்புவர்கள், தங்கள் திறமைக்குத் தகுந்த ஊதியத்துடன் தங்களாகவே பெற்றுக் கொள்வதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர் பணி பெற விரும்பும் அனைவரும் இந்த வலைதளத்தில் WWW.FINDTEACHERPOST.COM பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர்

Image
வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு. விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை  ,  மேலும் பல தகவல்களை அறிய  www.ibps.in என்ற இணையத்தளத்தில் பார்க்கவும்.

விவேகம் திரைப்பட விமர்சனம்

Image
விவேகம் திரைப்பட விமர்சனம் வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம். அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என "விவேகம்" அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கதை: அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர். அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் ஓபராயும் ஒருவர், இவர்களுக்கு ஒரு மிஷின் வருகின்றது. அதில், உலகத்திற்கு தெரியாமல் மூன்று நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். அது தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும், அதே நேரத்தில் இந்த பொறுப்பு அஜித் கையில் வர, நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர...

சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’

Image
சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில்  விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. .வி-ஸ்டுடியோஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் விஜயகாந்த் வெளியிட்டார், இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார். இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த, ‘மதுரவீரன்’. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில், சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி மற்றும் ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் இயக்கும் பொறுப்பையும் பி.ஜி.முத்தையா செய்கிறார். சந்தோஷ்...