புதிய வாகனம் விற்க தடை

புதிய வாகனம் விற்க தடை

போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி கூறியதாவது: லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு உத்தரவு விட்டுள்ளார்,தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.  அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 'விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன; அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், மோட்டார் வாகன சட்டங்களின் படி, வாகன விற்பனையாளர்கள், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாதோருக்கு, வாகனங்களை விற்கக்கூடாது. அவ்வாறு விற்றால், விற்பவர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்