நடிகர் அஜித் வெளியிட்ட பொது அறிவிப்பு
நடிகர் அஜித் வெளியிட்ட பொது அறிவிப்பு
நடிகர் அஜித் குமார் சார்பாக அவரது சட்ட ஆலோசகர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில், நடிகர் அஜித் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ அல்லது சமூக வலைப்பக்கத்தையோ அங்கீகரிக்கவில்லை.தனது பெயரையோ, புகைப்படத்தையோ தன் அனுமதி இல்லாமல் உபயோகிப்பதையோ தன் சார்பில் சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தையோ வெளியிட அனுமதிக்கவில்லை.தற்போது அவர் எந்த ஒரு வணிக சின்னத்திற்கும், பொருளுக்கும், நிறுவனத்துக்கும் அமைப்புக்கும் விளம்பரதூதர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment