காதலிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை
காதலிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை
அமெரிக்காவில் மாசாச்சூசெட்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கான்ராட் ராய். இவரது காதலி மிச்செலி கார்டர். மிச்செலி கார்டர் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் அனுப்பிய குறுஞ்செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளான கான்ராட் ராய் அவரது காருக்குள் ஒருவித நச்சு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்தபோது மிச்செலி கார்டர் தனது காதலர் கான்ராட் ராய்க்கு தற்கொலையை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் காதலனுடன் டெலிபோனிலும் பேசி இருந்தார்.எனவே தற்கொலைக்கு தூண்டியதாக மிச்செலி கார்டர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20 வயதான மிச்செலி கார்டருக்கு தற்கொலைக்கு தூண்டியதன் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Comments
Post a Comment