பான்கார்ட் மற்றும் ஆதார் இணைப்பு 31ம் தேதி வரை அவகாசம்
வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.

Comments
Post a Comment