2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
உ.பி.யில் நடைபெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விவசாயிகளின் வருமானம் 2022க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் அறிவித்த பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ரபி பருவத்துக்கு 1.5 சதவீதமும், காரிப் பருவத்துக்கு 2 சதவீதமும் பிரீமியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் : தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். பயிர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்த சுமார் 86 லட்சம் விவசாயிகள் இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.விவசாயிகளின் கடன் தொகையான சுமார் 50 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை யோகி ஆதித்யாநாத் வழங்கினார்.

Comments
Post a Comment