வடகொரியா மீது அதிரடி தடை விதித்த சீனா

வடகொரியா மீது அதிரடி தடை விதித்த சீனா

வடகொரியா அணு  ஆயுத  ஏவுகணைகளை சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கண்டித்துள்ளது மட்டுமின்றி தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் இருந்து தங்கள் நாட்டினை காத்துக்கொள்ளவே தமது நாடு அணுவாயுத சோதனைகளை மேற்கொள்வதாக  வடகொரியா அதிபர்  கிம் ஜோங் உன் தெரிவித்தார். இந்நிலையில் வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிரடியாக தடை செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய தடையால், ஏற்கனவே அமெரிக்கா முன்மொழிந்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்த பொருளாதார தடைகளால் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் வடகொரியா மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்