ஜன்தன் திட்டத்தால் மக்களின் விருப்பங்களை நிறைவேறும் : மோடி

ஜன்தன் திட்டத்தால் மக்களின் விருப்பங்களை நிறைவேறும் : மோடி

பிரதமர், நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, ஜன்தன வங்கி கணக்கு துவங்கி, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 
பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:ஜன்தன் திட்டம் துவங்கி, மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தால் பயனடைந்துள்ள, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.ஏழைகள், ஒடுக்கப்பட்டோரை, நிதி நீரோட்டத்தில் இணைப்பதை, இத்திட்டம் சாத்தியமாக்கி உள்ளது.ஜன்தன் திட்டத்தால், நாட்டில், கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்கள் நிறைவேறும் வகையில், மத்திய அரசு, சிறகுகளை அளித்துள்ளது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்