ராணுவம் வலிமையாக உள்ளது : ஜெட்லி

ராணுவம் வலிமையாக உள்ளது : ஜெட்லி

ராஜ்யசபாவில் கூட்டத்தின்pothu பேசிய மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி இந்திய ராணுவம் 1962 போரிலிருந்து பாடம் கற்றுள்ளது. அண்டை நாடுகளிடமிருந்து அச்சுறுத்தல் வருவதால், ராணுவம் சொந்த முயற்சியில் பாதுகாக்கும் பணியை திறம்பட செய்யும். பிரச்னை எந்த பகுதியில்  இருந்து வந்தாலும், நமது  வீரர்கள், நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.நமது நாட்டின் பாதுகாப்பிற்காக வீரர்கள் எத்தகைய தியாகமும் செய்வார்கள்.பயங்கரவாதம், அரசியல் மற்றும் மதரீதியிலான வன்முறையிலிருந்து நாட்டை விடுதலை பெறச் செய்ய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் பிரச்னைகளால், இந்தியா பெரிய சவால்களை சந்திக்கிறது. பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் தங்களது உயிரை  இழந்துள்ளனர்.நாட்டிற்கு வெளியிலும் , உள்ளிலும்  சிலர்   பயங்கரவாதத்தை பரப்ப முயற்சி செய்கின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் குரல் கொடுக்க வேண்டும். என்று  பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்