உ.பி -யில் இரயில் விபத்து : 20 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது இதில் 20 பேர் வரை பலியானார்கள். .400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ரயில் விபத்து சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்த்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை குறித்த விபரம் தெரியவில்லை. பல்வேறு நடவடிக்கை களுக்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளோம். மீ்ட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள் சதீஷ்மகானா,மற்றும் சுரேஷ் ராணா ஆகியோர் விரைந்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கலில் இச்சம்பவம் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இரங்கல்: உ.பி., ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரங்கல் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்