பாக்கிஸ்தான் அரசு இணையதளத்தில் இந்திய தேசிய கீதம்

பாக்கிஸ்தான் அரசு இணையதளத்தில் இந்திய தேசிய கீதம்

பாக்கிஸ்தான்  அரசினுடைய  இணையதளமான pakistan.gov.pk என்ற இணையதளம் இன்று சிறுது நேரம் மர்ம நபர்களால் (ஹேக்கர்ஸ்) முடக்கப்பட்டது. அந்த சில மணி நேரங்களில் இந்திய தேசிய கீதமும், இந்திய சுதந்திரதின வாழ்த்து அடங்கிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.மேலும் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. இதை ஹேக்கர்ஸ் செய்து உள்ளனர். இணையதளம் முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.  கடந்த சில மாதங்களுக்கு  முன்பு  டில்லி பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்லூரிகளின் இணையத்தளம் முடக்கப்பட்டு  ‛‛ பாக்கிஸ்தான் ஜிந்தபாத்'' என் வாசகம் இடம் பெற்றிருந்தது . இதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு செய்ததாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்