மும்பையில் பிரம்மாண்ட அமைதி பேரணி


மகாராஷ்டிர மாநிலம் தலைநகர் மும்பையில் மகாராஷ்டிர மாநில  மக்கள் தொகையில் 32 சதவிகிதம் மராத்தா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து மத்திய மாநில அரசுகள் அளித்து வரும் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மற்றும் இதர மானிய சலுகைகள் கிடைக்க செய்ய வேண்டும் என கோரி பலமுறை, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். தற்போது இந்த ஆண்டும் இதே கோரிக்கையை கேட்டு பல பகுதிகளில் மக்கள் ஒன்று திரண்டு போராடுகின்றனர்., கடந்தாண்டு கோபார்டி பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தங்களது இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்கத் தவறிய அரசை எதிர்த்தும் இன்றைய பேரணி நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்