ஐபோன் ஆப் தயாரித்த ஜப்பான் மூதாட்டி

ஐபோன் ஆப் தயாரித்த ஜப்பான் மூதாட்டி

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்மார்ட்போன் , முதியவர்களுக்கு உதவும் வகையில் அமையவில்லை. இதனால் தானாகவே முன்வந்து ஆப்பை உருவாக்கி சாதித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த மஸாகோ வகாமியா என்ற 82 வயது மூதாட்டி ஆப்பிள் ஐபோனுக்கு ஆப் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.இணையதளத்தின் உதவியுடன் கோடிங் எழுதக் கற்றுக்கொண்டவர், ஹினாடன் என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆப் ஜப்பானில் வெகுபிரபலமடைய, சமீபத்தில் நடந்த ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டிலும் வகாமியா கலந்து கொண்டுள்ளார். முதியவர்களின் நினைவுத்திறமை பரிசோதிக்கும் இந்த பிரத்யேக ஆப் இதுவரையிலும் 42,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்