திருமணம் தேவையில்லை ! இப்படியும் ஒரு கலாசாரமா?
இப்படியும் ஒரு கலாசாரமா?
திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது இந்திய கலாசாரத்திற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில்வாழும் கார்ஸியா பழங்குடி மக்கள் தான் இதை பின்பற்றி வருகிறார்கள்.அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆண் அல்லது பெண்ணை தெரிவு செய்து கொள்ளலாம்.பிறகு திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக இருவரும் வாழ அவர்களின் சமூகம் அனுமதி அளிக்கிறது.இருவரும் ஒன்றாக வாழ்க்கையை நடத்த போதிய பணம் இருக்கிறது என்ற நிலை வரும் போது அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடி குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.அப்படி முடியவில்லையெனில், இணைந்து வாழும் நபரை விட்டு பிரிந்து வேறு ஆண் அல்லது பெண்ணை தெரிவு செய்து அவர்களுடன் வாழலாம்.இணைந்து வாழும் ஜோடி திருமணம் செய்து கொண்டால், மணமகனின் குடும்பம் மணமகள் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும்.இங்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுவதால் அவர்கள் வேறு ஆணுடன் வாழ விரும்பினால் அதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த சூழலில் பெண்ணின் வாழ்க்கையில் புதிதாக வரும் ஆண், பழைய நபருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

Comments
Post a Comment