கத்தாருக்கு விசா இல்லாமல் சுற்றுலா பயணம்

கத்தாருக்கு விசா இல்லாமல் சுற்றுலா பயணம் கத்தாருக்கு விசா இல்லாமல் சுற்றுலா பயணம்

கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில்,“80 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார். கடந்த வருடம் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள்டி கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது. இப்போது விசா தொடர்பான முடிவு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி செயல்பாட்டிற்கு வருகிறது.
இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன.கத்தாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்தனர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு வர இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்