மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு : சிவ்ராஜ் சிங் சவுகான்
போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது புதிய இந்தியாவையும், புதிய மத்திய பிரதேசத்தையும் உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். மாநில அரசு நடத்தும், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை, பா.ஜ., செலுத்தும். பெண்களுக்கு, உள்ளாட்சியில், 33 சதவீத ஒதுக்கீடு அளிப்பது மட்டுமின்றி, அரசின் வனத்துறை தவிர, மற்ற அனைத்து துறைகளிலும், 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Post a Comment