இந்திய பயணத்தை தவிர்க்க சீனர்களுக்கு அரசு கோரிக்கை


டோக்லாம் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் போர் தொடுக்கும் அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது; இந்தியாவும், அங்கு, படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக, இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கு இடையே தொடர் பதற்றம் நிலவுவதால், கடந்த மாதம், 8ம் தேதி, இந்தியா செல்லும் சீன மக்களுக்கு, அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக, மக்களுக்கு, சீன அரசு, பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:
இந்தியா செல்லும் சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் இயற்கை பேரிடர், சாலை விபத்து, தொற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதால், இந்தியா செல்வதை, சீனர்கள் தவிர்க்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய பயணத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்