10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வு
10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2017-18), அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருகிற 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1-ம் தேதி ஆகும். மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் கூறினார்.

Comments
Post a Comment