மணமகனை கடத்திய மணமகள்


தனக்கு பிடிக்காத மணமகனை தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தியுள்ளார் மணமகள்.இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியில் மெக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த விருப்பம் இல்லாத திருமணத்தில் இருந்து தப்பிக்க மணமகனை கடத்த நினைத்த மணமகள் , மணமகனை வீட்டிற்கு வந்து கல்யாண ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார். இதனை நம்பி பெண் வீட்டிற்கு வந்த மாப்பிளையை இரண்டு நபர்கள் கடத்த முற்பட்டனர். எப்படியோ தப்பி ஓடிச்சென்ற மாப்பிளை இது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதுகுறித்து மனமக்களிடம் விசாரித்தபோது : தனக்கு திருமணம் பிடிக்கவில்லை எனவும் , ஆகையால் தான் தனது நண்பர்களிடம் கூறி மாப்பிளையை கடத்த சொன்னதாகவும் கூறினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்