மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள திரையரங்கம்
மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள திரையரங்கம்
சுவிற்சர்லாந்தின் Graubunden பகுதியில் அமைந்திருக்கும் Julierpass மலைப்பகுதியில் 2300 மீட்டர் உயரத்தில் திரையரங்க கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.மலைப்பகுதியில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் நடக்கும் திரையரங்கு கட்டிடத்தை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் Alain Berset கடந்த 31ம் திகதி திறந்து வைத்துள்ளார்.410 டன் எடை கொண்டதாக இரண்டு மில்லியன் பிராங்க் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.ஆண்டு முழுவதும் இங்கு நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.இந்த கட்டிடம் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இது கட்டிட கலைக்கு புதிய தளங்களை அமைக்கும் என கட்டிடத்தை கட்டியுள்ள நிறுவனம் கூறியுள்ளது.

Comments
Post a Comment