எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கும் அமீர்

எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கும் அமீர்

ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அமீர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். அதனால், தன் பெயரான பாண்டியனுடன் எம்.ஜி.ஆரை சேர்த்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என அழைக்கப்படுகிறார். அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ஆனந்த்ராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  தற்போது ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்துக் கொண்டிருப்பதால், இந்தப் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. ‘வடசென்னை’ முடிந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தேனியில் நடைபெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்