அக்ஷராவின் நடிப்பை புகழ்ந்து ட்வீட் செய்த விவேக் ஓபராய்

அக்ஷராவின் நடிப்பை புகழ்ந்து ட்வீட் செய்த விவேக் ஓபராய்

விவேகம் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துவரும் இப்படம், பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் விவேக் ஓபராய், அட்டகாசமாக நடித்துள்ளதாக அக்ஷரா ஹாசனைப் புகழ்ந்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். படத்தில் அவர் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றாலும் தனது கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார். விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பதிவில், விவேகம் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளோம். உங்களின் சிறப்பான நடிப்பிற்குப் பாராட்டுகள். திரையில் உங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்மால் பாம், பிக் ப்ளாஸ்ட் என அக்ஷராவை அவர் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்