Posts

Showing posts from 2017

நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை

Image
நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் வறுபடும் அரசியல் தலைவர்களில் ஒருவர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்திரராஜன். இது குறுத்து இவரிடம் ஒரு பேட்டியின் போது எழுப்பட்ட கேள்வியில் : ‛‛ நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன் இதனால் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜ., தலைவர் வலிமையான இருப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால் எனது. உயரம், தோற்றம், தலை முடி ஆகியவற்றை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறேன். எனது விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று தமிழிசை என்ற என் பெயரை ‛டுமிழிசை ' என மாற்றம் செய்தனர். அவர்களை பார்த்து நான் சிரிக்கிறேன். இதனால் எனக்கு கவலையில்லை'' என தெரிவித்துள்ளார்.

மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர்

Image
மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர் உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவன், அனுஜ் குமார். இந்த பள்ளியில் தினமும், மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும். சீருடை அழுக்காக இருந்ததால், மாணவன் அனுஜ், சமீபத்தில், சீருடை அணியாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, பள்ளிக்கு சென்றான். இதை பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவனின் பேன்ட்டை, கத்திரிக் கோலால் கத்தரித்தார். அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அதன்பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பினார்.கால்களில் ரத்தக் காயத்துடன் வந்த மகனை பார்த்து, அனுஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து, விசாரணைக்குப் பின் விடுவித்தனர். மாணவனின் கால்களில் ரத்தக் காயம் ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://themalar.com/index.php/component/k2/item/1048-2017-11-19-06-56...

சின்னப்பிள்ளை தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் : தமிழிசை

Image
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு கிடைத்தது குறித்து தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அப்படி இணைப்பு நடந்த போதே தெரிந்த விஷயம் தான் இவர்களுக்குத் தான் சின்னம் கிடைக்கும் என்பது. நிபந்தனைகளின் பேரில் தான் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுகவின் இந்த அணியை பலப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடத் தான் இந்த திட்டம். ஏனெனில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வாக்கு பெற முடியாது குறைவான வாக்குகளே அவர்களுக்கு கிடைக்கும் என்பது தெரியும் எனக் கூறியிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், இரட்டை இலைச்'சின்னம்'பாஜ., வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலை குறைப்பு !

Image
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்  http://themalar.com/index.php/component/k2/itemlist/category/5-2017-03-16-14-57-40 கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விலை உயரப்போகிறதாம் !

Image
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு -பிரசாத்தின் விலை இன்னும் சில நாட்களில் உயரப்போகிறது.இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. http://themalar.com/index.php/component/k2/item/1082-2017-11-27-10-54-57 இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவு ஆகிறது எனவும் சலுகை விலையில் லட்டு வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் இதுவரை லட்டு விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!!

Image
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!! http://themalar.com/index.php/component/k2/item/1083-2017-11-27-11-02-31 உலகின் இரண்டாவது போட்டியான 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த போட்டியில் மொத்தம் 92 நாட்டு கலந்து கொண்டன. லாஸ் வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி-லெய்க் நெல்-பீட்டர் என்ற 22 வயது அழகி வெற்றி பெற்றுள்ளார்.

காய்கறி விற்பனை செய்த கலெக்டர்

Image
காய்கறி விற்பனை செய்த கலெக்டர் http://themalar.com/index.php/component/k2/item/1087-2017-11-27-11-25-14 சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் கலெக்டராக பொறுப்பேற்ற ரோஹினி, அவ்வப்போது பொதுமக்களின் நலனுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாவட்ட ஆட்சியர் ரோஹினி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு குறித்தும் விற்பனைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள காய்கறிகள் விற்பனை செய்யும் மையத்திற்கு சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அருகேயிருந்த மீன்பண்ணைக்கு சென்று அங்கும் ஆய்வும் செய்தார். மாவட்ட கலெக்டர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Paytm வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்!!

Image
Paytm வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்!! பேடிஎம் மூலம் வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஓராண்டுக்குள் எதிர்பாராதவிதமாக சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். மேலும் ஸ்மார்ட்போன் திருட்டு, டிஸ்ப்ளே சேதம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்கள் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள், சியோமி, மோட்டோரோலா, விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது.  காப்பீடு திட்டத்தின் படி ஸ்மார்ட்போனின் மதிப்பில் இருந்து 5 சதவீதத்தை பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். குறிப்பாக பேடிஎம் மால் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.

தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த அமைச்சர்

Image
தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த அமைச்சர் http://themalar.com/  இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென், மேற்கு வங்கத்தில் உள்ள கலைகொண்டா விமானப்படை தளத்துக்கு சென்று நேற்று பார்வையிட்டார். பின் இந்திய தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவரது பயணம் நீடித்தது. பின் ‛தேஜாஸ்' குறித்து அவர் தெரிவிக்கையில், ‛தேஜாஸ் விமானத்தில் பயணிப்பது போர் விமானத்தில் பயணிப்பது போல் தெரியவில்லை. காரில் பயணிப்பது போல் இலகுவாக உள்ளது. இதனை சிங்கப்பூருக்காக வாங்க விரும்புகிறோம்' என்றார்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்

Image
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல் குவாரிகள் இனி தமிழகத்தில் கிடையாது -ஐகோர்ட்

Image
மணல் குவாரிகள் இனி தமிழகத்தில் கிடையாது -ஐகோர்ட் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழுதைகளை சிறையில் அடைத்த சம்பவம்

Image
உத்தரபிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் உள்ள ரூ.60  ஆயிரம் மதிப்புள்ள அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24ஆம் தேதி வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளன. மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின் போரில் கழுதைகளை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர் அவைகளை சிறையில் அடைத்தனர். கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அதன் உரிமையாளர் உள்ளூர் பாஜக தலைவர் ஆதரவுடன் சிறை வளாக அதிகாரியை சந்தித்து பேசிய பின்னரே கழுதைகள் விடுவிக்கப்பட்டது. அதுவும் நான்கு நாட்கள் கழித்துதான் கழுதைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. http://themalar.com/index.php/component/k2/item/1095-2017-11-29-11-20-34

அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினீர்களா!

Image
அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினீர்களா! ராஜஸ்தானில், கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசு துறைகளில் பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில், ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்ட தேதி, துறை ஆகியவற்றுடன், திருமணமானவர்கள் என்றால், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினாரா, இல்லையா என்பதை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு, பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரின் கையெழுத்துடன் வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில், மனைவி அல்லது அவரது பெற்றோரிடம் வரதட்சணை கேட்டதாக புகார்கள் வந்தாலோ அல்லது நீதிமன்றத்தை அணுகினாலோ, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு

Image
டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு டில்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டில்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன நிகழ்ச்சியி்ல கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஒபாமா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள இளைஞர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

பன்னாட்டு பேச்சுப்போட்டியில் இந்தியா இரண்டாம் நிலை வெற்றி

Image
இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்பாரதன் வெற்றி ! பன்னாட்டு மாணவர்களுக்கான ”பேசு தமிழா பேசு” போட்டி இலங்கையில் அண்மையில் நடைபெற்றது. மலேசியாவில் இயங்கிவரும் ‘ஆஸ்ட்ரோ வானவில்’ மற்றும் ‘வணக்கம் மலேசியா’ இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேர்வுசெய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக மொத்தம் மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் திருவாரூரில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் த.க.தமிழ்பாரதனும் ஒருவர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச்சுற்று என மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்தப் பன்னாட்டுப் போட்டி நடைபெற்றது. முதலிரண்டு சுற்றுகளில் வென்ற நான்கு மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் பங்கு கொண்ட மாணவர் தமிழ்பாரதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் இந்தியா, இலங்கை, மலேசியா(2) நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்றின் நிறைவில் இந்தியா சார்பில் பங்குகொண்ட...

எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல்

Image
எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல் குஜராத் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்., பா.ஜ. வும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அமரேலியில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.அதில் ராகுல் இந்து அல்லாதவர் என பதிவிடப்பட்டிருந்தது. இது பா.ஜ.வின் வேலை என காங். குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்பேசியது, சோம்நாத் கோயிலுக்கு சென்ற நான் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்து மட்டுமே போட்டேன். ஆனால் பா.ஜ.வினர் தான் மத பிரச்னையை குறிப்பிட்டு விஷமம் செய்துள்ளனர். மதத்தின் மீதான நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். நாங்கள் மதத்தை வைத்து வியாபாரம் செய்யவில்லை. நான் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள் தான் என பேசினார்.

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

Image
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா ரூ.99 குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது பிக் சேல் ஸ்கீம் என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச அடிப்படை கட்டணமாக ரூ.99 வரி இல்லாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை இருக்கும் நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.  இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி இந்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோர் தற்போது முந்திக்கொள்ளுங்கள்.

உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு

Image
சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்ற 2017-ம்ஆண்டின் உலக அழகி போட்டியில்  இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார். 20 வயதாகும் இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவராவார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீண்டும் உலக அழகியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா

Image
ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா அமெரிக்க பணிகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பதனடிப்படையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டவர்களை குறிப்பாக இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.H1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மாற்றியமைத்துள்ள நிலையில், முதுகலை படிப்பு படித்தவர்கள் மட்டுமே, இனி H1B விசா பெற விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை இந்தியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. H1B விசா கோரி, 2015ம் ஆண்டில் 2.75 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்க அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் நடப்பு ஆண்டில் H1B விசா கோரி, விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக சரிந்தது. முன்னணி நிறுவனங்களில் பெரும்பாலான பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.குறைந்தபட்ச சம்பளம் என பல்வேறு நெருக்கடிகளால் H1B விசா கோரும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர்...

சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம்

Image
சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம் அருணாச்சல் பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் விஜோய் நகர். இங்கு 1500 பேர் வசித்தாலும் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழ்நிலையில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், மியாவோ என்ற நகரிலிருந்து 5 நாட்கள் நடந்து செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை ஹெலிகாப்டர் சேவை இருந்தாலும், அதுவும் வானிலை மாற்றம் காரணமாக சில நேரங்களில் இருக்காது. மாநில பொது சுகாதார துறை, மத்திய, மாநில அரசு சார்பில், இங்கு வீடுதோறும் கழிப்பறை கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு, ஒரு மூட்டை சிமென்ட் ரூ.8 ஆயிரமாகவும், சிறிய கழிப்பறை அமைக்க நிலம் வழங்க ரூ.2 ஆயிரம் வசூலிக்கின்றனர். மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நகரத்திற்கு அனைத்து பொருட்களையும் சக்மாஸ் இன மக்கள் தான் கொண்டு செல்கின்றனர். அவர்கள் 150 கிலோ எடை கொண்ட ஒரு சிமென்ட் மூட்டைக்கு ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்துள்ளனர். போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் மக்கள் இதை சுமந்து செல்வர் ஆதலால் இவ்வளவு விலை உயர்வு !

ஐ.பி.எஸ் மனைவி குழந்தையுடன் சிறைவாசம்

Image
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைசேர்ந்தவர், ஷபீர் கரிம், 29. இவர், 2014ல், அகில  இந்திய அளவில், 112வது இடத்தில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்ச்சி பெற்றார். எனினும், அவர், ஐ.பி.எஸ்., பணியை தேர்வு செய்து, 2016ல், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக, பயிற்சி பெற்று வந்தார். மனைவிக்காக மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயன்ற அவர், அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, பெண்கள் மேல்நிலை பள்ளியில், மெயின் தேர்வு எழுதியபோது, புளூ டூத் வழியாக காப்பி அடித்து சிக்கினார். இவரை, எழும்பூர் போலீசார், நேற்று முன் தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நேற்று, அவரது மனைவி, ஜாய்சி மற்றும் கூட்டாளி, ராம்பாபு ஆகியோரை கைது செய்தனர். ஐதராபாத்தில் இருந்து இன்று காலை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்ட ஜாய்சி, ஒன்றரை வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

என்னை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - ராதிகா ஆப்தே பேட்டி

Image
பாலிவுட்டில் நடிகைகளை படுக்கைகளு அழைப்பது என்பது மிகவும் அதிகம் என  கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். அதேபோல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சகஜமான ஒன்று பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினர். அதோபோல், தோனி, கபாலி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. மேலும், பாலிவுட்டில் அரை நிர்வாணமாக இவர் நடித்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “தென்னிந்திய பட உலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான். நான் ஒரு முறை ஒரு தயாரிப்பாளரை சந்தித்தேன். படம் தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் நான் அதிர்ச்சியானேன். அவருக்கு நான் உடன்படவில்லை. அதனாலேயே எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்புகள் வரவில்லை என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” பட மிரட்டல் டீஸர்

Image
சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” பட மிரட்டல் டீஸர் Click -   https://youtu.be/ddRyInAwFl0

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் ட்ரைலர்

Image
“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் ட்ரைலர் https://youtu.be/uLuGOOFORAs

கந்தசஷ்டி இன்று துவக்கம்

Image
பழநி மலைக்கோவிலில் இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. அக்., 25ல் சூரன் வதத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடக்க வேண்டிய சாய்ரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கும். அசுரர்களை வதம்புரிய மலைக்கொழுந்து அம்மனிடம், சின்னக்குமாரசுவாமி வேல் வாங்கிய உடன், மதியம், 2:30 மணிக்கு நடை சாத்தப்படும். இதனால் அன்று இரவு, 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து முத்துக் குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். மலைக்கோவிலில், 26 காலை, 10:45 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ஜெசிந்தா நியூசிலாந்து பிரதமராக தேர்வு

Image
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(37)  பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகிறார்.

ஏலத்திற்கு வந்த தாவூத் சொத்து

Image
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு, மும்பை மற்றும் அவுரங்காபாதில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, இதற்கு முன், 2001, 2013 மற்றும் 2015ல் முயற்சிகள் நடந்தன. ஆனால், தாவூத் மீதான பயத்தால், அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை.அவன் மீதான வழக்குகளின் அடிப்படையில், மும்பை மற்றும் அவுரங்காபாதில், தாவூத்துக்கு சொந்தமான, ஆறு சொத்துக்கள் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

போக்குவரத்துக்கழக கட்டடம் இடிந்து 8 பேர் பலி

Image
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வரையின் மேற்கூறை இன்று(அக்.,20) அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைகாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு செய்யப்படும். நாகை பொறையார் போக்குவரத்து பணிமனைக்கு செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்டட விபத்தில் உயிரிழந்தோரில் 7 பேர் டிரைவர்கள். ஒருவர் நடத்துனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்

Image
ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன; இதை, 'லவ் ஜிகாத்' என, கூறுகின்றன. கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த, அனீஸ் ஹமீதும், காதலித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி, இஸ்லாத்துக்கு மதம் மாறி, அனீசை திருமணம் செய்தார்; ஆனால், ஸ்ருதியை கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டதாக, அனீஸ் மீது, ஸ்ருதியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, ஸ்ருதியும், அனீசும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஸ்ருதி, ''மதம் மாற, என்னை யாரும் வற்புறுத்தவில்லை. அனீசை திருமணம் செய்து கொள்ளவே, மதம் மாறினேன்,'' என்றார். இதையடுத்து, கணவனுடன் செல்ல, ஸ்ருதியை அனுமதித்து, நீதிபதி கூறுகையில், 'கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து கலப்பு திருமணங்களையும், லவ் ஜிகாத் என, கூற முடியாது. 'ஏனெனில், காதலுக்கு, ஜாதி, மதம் என எதுவ...

பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்

Image
தெருவீதிகளில் பெண்களை கேலி, கிண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும்  ஆண்களுக்கு உடனடியாக ஸ்பாட் ஃபைன் விதிக்க பிரான்ஸ் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.சாலைகளில் செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகின்றது. ஒருசிலர் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தும் விடுகின்றனர். இந்தநிலை தொடராமல் இருக்க பெண்களை கிண்டல் செய்வது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஸ்பாட் ஃபைன் போடும் புதிய சட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசின் பெண்கள் நல அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதற்கு அந்நாட்டு அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்த சட்டத்தை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடிகை ராதிகா இந்த சட்டம் நல்ல ஐடியா என்றும், இதை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க -ஃபேஸ் பேக்

Image
மாதுளை தோல் ஃபேஸ் பேக் : மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதுளை பொடி 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 2-3 துளிகள், தயிர் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாறு 1 டேபிள் ஸ்பூன், பால் 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து வைத்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

சபரிமலை நடை இன்று திறப்பு

Image
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை  திறக்கிறது.இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுடன் மதியம் களபாபிஷேகம், சகஸ்ர கலசம் நடக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.

பெங்களூரில் கடற்கன்னி போராட்டம்

Image
பெங்களூரில் கடற்கன்னி போராட்டம் பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், புதுமையான போராட்டம் நடத்தினார்.குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதை கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சட்டப்படி நடந்த திருமணம் செல்லாது :உச்ச நீதிமன்றம்

Image
'திருமணமாகி இருந்தாலும், மனைவிக்கு, 18 வயது பூர்த்தி ஆகாவிட்டால், அவருடன், கணவர் உறவு கொள்வது, பாலியல் பலாத்கார குற்றம்' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு, குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கும் என கருதுவதால், இந்த வழக்கில், மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது என, தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு, 18 வயது பூர்த்தியாகாத சிறுமியருக்கு திருமணம் நடப்பதை, சட்டப்படி தடுக்கும். இந்த உத்தரவு, மத்திய அரசுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது. இவ்வாறு அவர் கூறினார். 1860ம் ஆண்டு சட்டப்படி, மனைவி, 15 - 18 வயதுக்குள் இருந்தால், அவருடன் உறவு கொள்ளும், அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு தொடுக்க முடியாது. இந்த ஷரத்தை, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

துாய்மை இந்தியா சின்னம் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா ?

Image
'துாய்மை இந்தியா' தொடர்பான சின்னம், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா என்பது குறித்த விபரங்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அளித்த பதில்: புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில், துாய்மை இந்தியா திட்டம் தொடர்பான,'லோகோ' எனப்படும், சின்னம் இடம்பெறுமா என்பது குறித்த தகவல்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது. இத்தகைய தகவல்களை வெளியிடுவது, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல், பொருளாதார நலன் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒழிக்க நவீன பாதுகாப்பு கருவிகள்

Image
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக  கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில், பாதுகாப்பு படையினருடன், மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டவும், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும் பயன்படும் அதி நவீன கருவிகள், போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன.ஊடுருவல் எச்சரிக்கை கருவி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்த கருவி, முக்கிய போலீஸ் கட்டடங்களில் பொருத்தப்படும். இதைத் தாண்டி, பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தால், இந்த கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதலை தடுத்து நிறுத்த, போலீசாருக்கு அவகாசம் கிடைக்கும்.போலீஸ் அலுவலக, 'கேட்'களில், ரேடியோ அதிர்வெண் மூலமாக வாகனங்களை அடையாளம் பார்த்து அனுமதிக்கும் இயந்திரங்கள், நிறுவப்படவுள்ளன. குறிப்பிட்ட, 'டேக்' ஒட்டப்படாத, வாகனங்கள் வந்தால், நுழைவாயில், 'கேட்' திறக்காது. இதனால், பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல்களை தடுக்க முடியும். பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு, கண்ணி...

வளர்ச்சிப்பாதையில் இந்தியா : நிதீஷ் குமார்

Image
பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் மோடி தொடர்பான புத்தகத்தின் ஹிந்தி பதிப்பை, முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டார். பின் அவர் பேசியதாவது, நாடு இதுவரை பல்வேறு பிரதமர்களை சந்தித்துள்ளது. அவர்கள் பிரதமர் பதவியை மட்டும் அலங்கரித்துள்ளனரே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களது பங்கு என்று குறிப்பிட்டு சொல்லும்படி எவரும் அமையவில்லை. அந்த குறையை போக்கும் வகையில், பிரதமர் மோடியின் நிர்வாகம் அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரியின் மூலம் சிக்கலான வரிவிதிப்பு மற்றும் வரிநிர்ணய முறைகள் பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையாக்கப்பட்டுள்ளன. வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை ஆக்கப்பட்டுள்ளதால், வரி ஏய்ப்பு, மோசடி உள்ளிட்டவை நடக்க வாய்பில்லை.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டுமென்றால், சில அசாத்திய நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என்பதை மோடி, முன்கூட்டியே கணித்திருந்தார். அதன்விளைவாகவே, பண மதிப்பிழப்பு நிகழ்வு. இதன்மூலம், மக்கள் சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் விளைந்த நன்மைகளை பட்டியலிட முடியாது.

விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது - வெங்கைய நாயுடு

Image
டில்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத்தில், அவரை சந்தித்து பேசுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்தனர். வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் விவசாயிகளுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா இப்போதும் விவசாய நாடாகவே திகழ்ந்து வருகிறது. ஆனாலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் 18,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன. முறையற்ற பருவ மாற்றத்தின் காரணமாக விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது. இதனால் விவசாய மக்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மோசமான சாலைகள், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் ஊடகங்கள் கிராமங்களையும், அங்கு விவசாயிகள் படும் அல்லல்களையும் கண்டுகொள்வதில்லை.விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக எந்த மன்றத்துக்கும் போக நான் தயார். அவர்களுக்காக எப்போதும் நான் முன்வந்து நிற்பேன். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் விவசாயத்தில் முதலீடு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான அமைப்...

டெங்கு பரவ உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் காரணம் - ஸ்டாலின்

Image
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணியை  மேற்கொண்ட ஸ்டாலின்  செய்தியாளர்களிடம் கூறியதாவது : டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில், 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். தினமும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையுடன் நின்று விடாமல், தி.மு.க., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி அதற்கான சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலவேம்பு கசாயம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் அளித்து வருகிறோம். இந்த கொடுமைகளுக்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் நடக்காதது தான். தேர்தல் நடந்து இருந்தால், மக்கள் பிரதிநிதிகள் சுகாதார பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு ஒழியும்.

3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்

Image
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிக்காக 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய தொழில்நுட்ப துறையை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நிதி செலவிட ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஏறக்குறைய 50,000 இளைஞர்கள் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்

Image
இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக  பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது. சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும். என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில்,' இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

Image
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான வேகன் ஆர் கார் ( கார் எண்:  டி.எல். 9 சி ஜி 9769 ) டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடு போன கார் குறித்து தீவிர  விசாரணை நடந்து வருகிறது. இத்தனைக்கும் பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தை கைது செய்ய பாஜக போர்க்கொடி.!

Image
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாஜக பிரமுகரை நடிகர் சந்தானம் தாக்கியதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் பேனர் அடித்து ஒட்டியுள்ளனர்.அதில் பிரேம் ஆனந்த் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சந்தானம் மீது காவல்துறையே உடனே நடவடிக்கை எடு. கைது செய் கைது செய் என்று வாசகம் அடங்கியுள்ள பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் சந்தானத்தை சேர்ந்த ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா

Image
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன்  இணைந்து தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார். இந்தியாவின் முப்படைகளும் அந்தமான நிகோபார் தீவுகளில் நிலைகொண்டுள்ளன. அங்கு வரும் 18ம் தேதி(அக்.,18) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் தினமான அக்.,19ம் தேதி, முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.