சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம்

சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம்

அருணாச்சல் பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் விஜோய் நகர். இங்கு 1500 பேர் வசித்தாலும் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழ்நிலையில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், மியாவோ என்ற நகரிலிருந்து 5 நாட்கள் நடந்து செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை ஹெலிகாப்டர் சேவை இருந்தாலும், அதுவும் வானிலை மாற்றம் காரணமாக சில நேரங்களில் இருக்காது. மாநில பொது சுகாதார துறை, மத்திய, மாநில அரசு சார்பில், இங்கு வீடுதோறும் கழிப்பறை கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இங்கு, ஒரு மூட்டை சிமென்ட் ரூ.8 ஆயிரமாகவும், சிறிய கழிப்பறை அமைக்க நிலம் வழங்க ரூ.2 ஆயிரம் வசூலிக்கின்றனர். மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நகரத்திற்கு அனைத்து பொருட்களையும் சக்மாஸ் இன மக்கள் தான் கொண்டு செல்கின்றனர். அவர்கள் 150 கிலோ எடை கொண்ட ஒரு சிமென்ட் மூட்டைக்கு ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்துள்ளனர். போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் மக்கள் இதை சுமந்து செல்வர் ஆதலால் இவ்வளவு விலை உயர்வு !

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்