முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

கொத்தமல்லி இலை நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவு பொருள். நமது சமையலை அலங்கரிப்பதற்கும், நல்ல வாசனையை சமையலுக்கு கொடுப்பதற்கும், சுவைக்காவும் தான் பயன்படுத்தியிருப்போம். அது மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?  கொத்தமல்லி இலையில் அதிக வாசனை திரவம் இருப்பதால் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும்.
*கொத்தமல்லி மற்றும் கற்றாழை அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.
*முகப்பருக்கள் முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.
பேஸ் பேக் கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.
*கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை உணரலாம். முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளையும் போக்குகிறது. முக சுருக்கங்களை நீக்க உதவுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்