வடகொரியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.

வடகொரியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.

அமெரிக்காவை மிரட்டும் வகையில் தினங்களுக்கு முன்பு அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்தது. இதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன , அதன் வகையில் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து , இதுபோல் சோதனை செய்வது தவறானதாகும் என்று , ஐநா வின் பொருளாதார தடைகளையும் மீறி சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்தது. தற்போது ஜப்பானுக்கு அருகில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவை தாக்க 4 ஏவுகணைகள் தயாராக உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் தீவு வடகொரியாவில் இருந்து 3356 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 541 சதுர பரப்பளவைக்கொண்ட இத்தீவில் 1 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இதுதொடர்பாக அந்த நாட்டு அரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்காக ஹவாசாங் என்ற வகையை சேர்ந்த நான்கு ஏவுகணைகளை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இன்னும் 4 நாட்களில் தயாராகிவிடும் என்றும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ராணுவ தளபதி கிம் ராக் கயாம் தகவலை கூறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்