சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’
சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ படத்தின்படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. .வி-ஸ்டுடியோஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் விஜயகாந்த் வெளியிட்டார்,
இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார். இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த, ‘மதுரவீரன்’. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில், சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி மற்றும் ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் இயக்கும் பொறுப்பையும் பி.ஜி.முத்தையா செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

Comments
Post a Comment