ராஜஸ்தானில், 27 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் : பிரதமர் மோடி


ராஜஸ்தானில்,தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் ,இந்த  9,500 திட்டங்களின் மதிப்பு, 27 ஆயிரம் கோடி ரூபாய். உதய்பூரில் நடக்கும் விழாவில், பல திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.மத்திய சாலை போக்கு வரத்து துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை, ராஜஸ்தானில், 3,000 கி.மீ., சாலைகள் அமைக்கும், 109 திட்டங்களுக்கு நிதி அளிக்கின்றன. தேசிய சாலைகள் நிர்மாணித்தல், அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதுமட்டும் இல்லாமல் உதய்பூரில் நடக்கவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை, மாநிலத்தின் பல பகுதிகளில், பெரிய திரைகளில் மக்கள் பார்க்கும் வகையில், நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்