இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி'


சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. வடிவேலு அடுத்ததாக `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். 
சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறது.இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலு கடந்த 3 மாதகாலமாக கடுமையாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். நேற்று இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வடிவேலுவின் புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்