மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தில் இடைக்கால தடை
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தில் இடைக்கால தடை
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய , மாநில சார்பில் வாதாடின. மருத்துவ படிப்பிற்கான அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின. சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Comments
Post a Comment