ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி ராஜினாமா
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி ராஜினாமா
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் விபத்து ஏற்படுவதால் தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சராக இருந்து வரும் நான் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக எனது ரத்தம், வியர்வையை அர்ப்பணித்துள்ளேன். பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து, பல மைல்கல்களை எட்டி உள்ளோம்.பிரதமரின் புதிய இந்தியா திட்டத்தின்படி ரயில்வேயை நவீன மயமாக தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதன்படி ரயில்வே நிர்வாகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடக்கும் விபத்துக்களால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இதனால் பல பயணிகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.இதற்கு முழு பொறுப்பேற்று பிரதமர் மோடியை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன்.

Comments
Post a Comment