புளுவேல் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

தமிழகம் , மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி 

பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று எழுதியிருப்பதை கண்டறிந்தனர். 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்