சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற : மத்திய அரசு உத்தரவு
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற : மத்திய அரசு உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:பல நாடுகளுடன், நாம் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறோம். அங்குள்ள பிரச்னைகளால், பலர் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கி வருகின்றனர்.இதுபோல் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை, பயங்கரவாத அமைப்புகள், தங்கள் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றன. இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அண்டை நாடான மியான்மரின் ராகைன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடா இந்தியாவில் தங்கியிருப்பதாக, பார்லிமென்ட்டில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுபோலவே, அண்டை நாடுகளைச் சேர்ந்த பலர், அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக தங்கிஉள்ளனர். இவர்களுக்கு பணம் கொடுத்து, தங்கள் பணிகளுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்; இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. அதனால், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து வெளியேற்றும்படி, மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Comments
Post a Comment