Posts

Showing posts from October, 2017

என்னை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - ராதிகா ஆப்தே பேட்டி

Image
பாலிவுட்டில் நடிகைகளை படுக்கைகளு அழைப்பது என்பது மிகவும் அதிகம் என  கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். அதேபோல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சகஜமான ஒன்று பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினர். அதோபோல், தோனி, கபாலி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. மேலும், பாலிவுட்டில் அரை நிர்வாணமாக இவர் நடித்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “தென்னிந்திய பட உலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான். நான் ஒரு முறை ஒரு தயாரிப்பாளரை சந்தித்தேன். படம் தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் நான் அதிர்ச்சியானேன். அவருக்கு நான் உடன்படவில்லை. அதனாலேயே எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்புகள் வரவில்லை என நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” பட மிரட்டல் டீஸர்

Image
சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” பட மிரட்டல் டீஸர் Click -   https://youtu.be/ddRyInAwFl0

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் ட்ரைலர்

Image
“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் ட்ரைலர் https://youtu.be/uLuGOOFORAs

கந்தசஷ்டி இன்று துவக்கம்

Image
பழநி மலைக்கோவிலில் இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. அக்., 25ல் சூரன் வதத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடக்க வேண்டிய சாய்ரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கும். அசுரர்களை வதம்புரிய மலைக்கொழுந்து அம்மனிடம், சின்னக்குமாரசுவாமி வேல் வாங்கிய உடன், மதியம், 2:30 மணிக்கு நடை சாத்தப்படும். இதனால் அன்று இரவு, 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து முத்துக் குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். மலைக்கோவிலில், 26 காலை, 10:45 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ஜெசிந்தா நியூசிலாந்து பிரதமராக தேர்வு

Image
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(37)  பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகிறார்.

ஏலத்திற்கு வந்த தாவூத் சொத்து

Image
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு, மும்பை மற்றும் அவுரங்காபாதில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, இதற்கு முன், 2001, 2013 மற்றும் 2015ல் முயற்சிகள் நடந்தன. ஆனால், தாவூத் மீதான பயத்தால், அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை.அவன் மீதான வழக்குகளின் அடிப்படையில், மும்பை மற்றும் அவுரங்காபாதில், தாவூத்துக்கு சொந்தமான, ஆறு சொத்துக்கள் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

போக்குவரத்துக்கழக கட்டடம் இடிந்து 8 பேர் பலி

Image
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வரையின் மேற்கூறை இன்று(அக்.,20) அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைகாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு செய்யப்படும். நாகை பொறையார் போக்குவரத்து பணிமனைக்கு செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்டட விபத்தில் உயிரிழந்தோரில் 7 பேர் டிரைவர்கள். ஒருவர் நடத்துனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்

Image
ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன; இதை, 'லவ் ஜிகாத்' என, கூறுகின்றன. கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த, அனீஸ் ஹமீதும், காதலித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி, இஸ்லாத்துக்கு மதம் மாறி, அனீசை திருமணம் செய்தார்; ஆனால், ஸ்ருதியை கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டதாக, அனீஸ் மீது, ஸ்ருதியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, ஸ்ருதியும், அனீசும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஸ்ருதி, ''மதம் மாற, என்னை யாரும் வற்புறுத்தவில்லை. அனீசை திருமணம் செய்து கொள்ளவே, மதம் மாறினேன்,'' என்றார். இதையடுத்து, கணவனுடன் செல்ல, ஸ்ருதியை அனுமதித்து, நீதிபதி கூறுகையில், 'கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து கலப்பு திருமணங்களையும், லவ் ஜிகாத் என, கூற முடியாது. 'ஏனெனில், காதலுக்கு, ஜாதி, மதம் என எதுவ...

பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்

Image
தெருவீதிகளில் பெண்களை கேலி, கிண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும்  ஆண்களுக்கு உடனடியாக ஸ்பாட் ஃபைன் விதிக்க பிரான்ஸ் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.சாலைகளில் செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகின்றது. ஒருசிலர் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தும் விடுகின்றனர். இந்தநிலை தொடராமல் இருக்க பெண்களை கிண்டல் செய்வது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஸ்பாட் ஃபைன் போடும் புதிய சட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசின் பெண்கள் நல அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதற்கு அந்நாட்டு அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்த சட்டத்தை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடிகை ராதிகா இந்த சட்டம் நல்ல ஐடியா என்றும், இதை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க -ஃபேஸ் பேக்

Image
மாதுளை தோல் ஃபேஸ் பேக் : மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதுளை பொடி 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 2-3 துளிகள், தயிர் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாறு 1 டேபிள் ஸ்பூன், பால் 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து வைத்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

சபரிமலை நடை இன்று திறப்பு

Image
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை  திறக்கிறது.இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுடன் மதியம் களபாபிஷேகம், சகஸ்ர கலசம் நடக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.

பெங்களூரில் கடற்கன்னி போராட்டம்

Image
பெங்களூரில் கடற்கன்னி போராட்டம் பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், புதுமையான போராட்டம் நடத்தினார்.குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதை கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சட்டப்படி நடந்த திருமணம் செல்லாது :உச்ச நீதிமன்றம்

Image
'திருமணமாகி இருந்தாலும், மனைவிக்கு, 18 வயது பூர்த்தி ஆகாவிட்டால், அவருடன், கணவர் உறவு கொள்வது, பாலியல் பலாத்கார குற்றம்' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு, குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கும் என கருதுவதால், இந்த வழக்கில், மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது என, தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு, 18 வயது பூர்த்தியாகாத சிறுமியருக்கு திருமணம் நடப்பதை, சட்டப்படி தடுக்கும். இந்த உத்தரவு, மத்திய அரசுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது. இவ்வாறு அவர் கூறினார். 1860ம் ஆண்டு சட்டப்படி, மனைவி, 15 - 18 வயதுக்குள் இருந்தால், அவருடன் உறவு கொள்ளும், அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு தொடுக்க முடியாது. இந்த ஷரத்தை, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

துாய்மை இந்தியா சின்னம் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா ?

Image
'துாய்மை இந்தியா' தொடர்பான சின்னம், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா என்பது குறித்த விபரங்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அளித்த பதில்: புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில், துாய்மை இந்தியா திட்டம் தொடர்பான,'லோகோ' எனப்படும், சின்னம் இடம்பெறுமா என்பது குறித்த தகவல்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது. இத்தகைய தகவல்களை வெளியிடுவது, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல், பொருளாதார நலன் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒழிக்க நவீன பாதுகாப்பு கருவிகள்

Image
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக  கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில், பாதுகாப்பு படையினருடன், மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டவும், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும் பயன்படும் அதி நவீன கருவிகள், போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன.ஊடுருவல் எச்சரிக்கை கருவி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்த கருவி, முக்கிய போலீஸ் கட்டடங்களில் பொருத்தப்படும். இதைத் தாண்டி, பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தால், இந்த கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதலை தடுத்து நிறுத்த, போலீசாருக்கு அவகாசம் கிடைக்கும்.போலீஸ் அலுவலக, 'கேட்'களில், ரேடியோ அதிர்வெண் மூலமாக வாகனங்களை அடையாளம் பார்த்து அனுமதிக்கும் இயந்திரங்கள், நிறுவப்படவுள்ளன. குறிப்பிட்ட, 'டேக்' ஒட்டப்படாத, வாகனங்கள் வந்தால், நுழைவாயில், 'கேட்' திறக்காது. இதனால், பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல்களை தடுக்க முடியும். பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு, கண்ணி...

வளர்ச்சிப்பாதையில் இந்தியா : நிதீஷ் குமார்

Image
பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் மோடி தொடர்பான புத்தகத்தின் ஹிந்தி பதிப்பை, முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டார். பின் அவர் பேசியதாவது, நாடு இதுவரை பல்வேறு பிரதமர்களை சந்தித்துள்ளது. அவர்கள் பிரதமர் பதவியை மட்டும் அலங்கரித்துள்ளனரே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களது பங்கு என்று குறிப்பிட்டு சொல்லும்படி எவரும் அமையவில்லை. அந்த குறையை போக்கும் வகையில், பிரதமர் மோடியின் நிர்வாகம் அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரியின் மூலம் சிக்கலான வரிவிதிப்பு மற்றும் வரிநிர்ணய முறைகள் பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையாக்கப்பட்டுள்ளன. வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை ஆக்கப்பட்டுள்ளதால், வரி ஏய்ப்பு, மோசடி உள்ளிட்டவை நடக்க வாய்பில்லை.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டுமென்றால், சில அசாத்திய நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என்பதை மோடி, முன்கூட்டியே கணித்திருந்தார். அதன்விளைவாகவே, பண மதிப்பிழப்பு நிகழ்வு. இதன்மூலம், மக்கள் சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் விளைந்த நன்மைகளை பட்டியலிட முடியாது.

விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது - வெங்கைய நாயுடு

Image
டில்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத்தில், அவரை சந்தித்து பேசுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்தனர். வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் விவசாயிகளுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா இப்போதும் விவசாய நாடாகவே திகழ்ந்து வருகிறது. ஆனாலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் 18,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன. முறையற்ற பருவ மாற்றத்தின் காரணமாக விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது. இதனால் விவசாய மக்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மோசமான சாலைகள், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் ஊடகங்கள் கிராமங்களையும், அங்கு விவசாயிகள் படும் அல்லல்களையும் கண்டுகொள்வதில்லை.விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக எந்த மன்றத்துக்கும் போக நான் தயார். அவர்களுக்காக எப்போதும் நான் முன்வந்து நிற்பேன். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் விவசாயத்தில் முதலீடு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான அமைப்...

டெங்கு பரவ உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் காரணம் - ஸ்டாலின்

Image
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணியை  மேற்கொண்ட ஸ்டாலின்  செய்தியாளர்களிடம் கூறியதாவது : டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில், 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். தினமும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையுடன் நின்று விடாமல், தி.மு.க., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி அதற்கான சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலவேம்பு கசாயம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் அளித்து வருகிறோம். இந்த கொடுமைகளுக்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் நடக்காதது தான். தேர்தல் நடந்து இருந்தால், மக்கள் பிரதிநிதிகள் சுகாதார பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு ஒழியும்.

3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்

Image
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிக்காக 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய தொழில்நுட்ப துறையை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நிதி செலவிட ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஏறக்குறைய 50,000 இளைஞர்கள் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்

Image
இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக  பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது. சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும். என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில்,' இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

Image
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான வேகன் ஆர் கார் ( கார் எண்:  டி.எல். 9 சி ஜி 9769 ) டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடு போன கார் குறித்து தீவிர  விசாரணை நடந்து வருகிறது. இத்தனைக்கும் பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தை கைது செய்ய பாஜக போர்க்கொடி.!

Image
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாஜக பிரமுகரை நடிகர் சந்தானம் தாக்கியதாக  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் பேனர் அடித்து ஒட்டியுள்ளனர்.அதில் பிரேம் ஆனந்த் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சந்தானம் மீது காவல்துறையே உடனே நடவடிக்கை எடு. கைது செய் கைது செய் என்று வாசகம் அடங்கியுள்ள பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் சந்தானத்தை சேர்ந்த ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா

Image
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன்  இணைந்து தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார். இந்தியாவின் முப்படைகளும் அந்தமான நிகோபார் தீவுகளில் நிலைகொண்டுள்ளன. அங்கு வரும் 18ம் தேதி(அக்.,18) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் தினமான அக்.,19ம் தேதி, முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பேஸ்புக்'கில் மீண்டும் சர்ச்சை 'வீடியோ'

Image
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாமில் உள்ள, ஜோர்கட் முகாமில் பணியாற்றி வரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில், தன் உயரதிகாரிகள் மீது புகார் கூறியிருந்தார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில் மீண்டும், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'ஓய்வின்றி வேலை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். சரியான உணவு இல்லை. வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் துவங்கி உள்ளேன்' என, கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி வருவதாக, மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகல்

Image
யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி  வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்!

Image
ஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Alstom என்ற நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயிலை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளது. Coradia iLint எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரயில் இயங்குவதால் புகை உள்ளிட்ட எதுவும் வெளியாகாது. மேலும், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒரு ரயில் 600 முதல் 800 கி.மீ வரை பயணமாகும். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்றும் தொலைதூர பயணங்களுக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த பயணிகள் ரயில் எதிர்வரும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி பணம் எடுக்க கட்டணம் இல்லை -எஸ்பிஐ

Image
வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம்  மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவும் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி உடனான ரூ.300, இனி ஜிஎஸ்டி உடன் ரூ.100 ஆக குறைக்கப்படும். பிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் இனி தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

டெங்கு சிகிச்சை முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு

Image
டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவமனைகளில்  டெங்கு நோயாளிகள் அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள் என சென்னை ஐகோர்ட்டில் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இன்று தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ம் தேதி வரை 11,944 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.13.95 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்குவை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என கூறி எவரையும் திருப்பி அனுப்பவில்லை. நிலவேம்பு குடிநீருக்காக 2000 கிலோ பொடி கையிருப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்...

பார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால்

Image
அரசு நிர்ணயம் செய்த கட்டணைத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும் என்பது ' உட்பல பல அதிரடி அறிவிப்புகளை நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அறிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சினிமா உலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்பட வேண்டும். கேண்டின்களில் எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்களை விற்பனை செய்யப்பட வேண்டும். தியேட்டர்களில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும். என விஷால் அறிவித்துள்ளார்.

ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்

Image
ஜியோ தனது தீபாவளி ஆஃபராக 100% கேஷ்பேக் சலுகையை அறிவித்ததை அடுத்து  ஏர்டெல் மை இன்ஃபினிட்டி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய சலுகையில் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தி்ல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாத பயன்பாட்டில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112 ஜிபி டேட்டா வழங்கப்படும், இதனை தினசரி 4 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும். மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைக்கு கிளம்பினார் சசிகலா

Image
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு,  பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.அவரது பரோல் விடுமுறை, இன்று முடிவுற்றது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

நாய்களை கொடுமைப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்

Image
கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து நகராட்சி ஊழியர்கள் நாய்களை கழுத்தை இறுக்கும்  வகையில் கயிற்றால் இழுத்த சம்பவம் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவ துவங்கியது. அதில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில், தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் இரண்டு பேர், நாய் ஒன்றை கழுத்திலும், உடம்பிலும் கயிற்றால் இறுக்க கட்டி அறை ஒன்றிலிருந்து தரதரவென இழுத்து சென்றனர். அப்போது அந்த நாய் மூச்சுவிட முடியாமல் கதறியது. தொடர்ந்து அந்த நாயை கல்வி நிறுவனம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். அப்போது நாய் மயங்கி விழுந்தது போன்று இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த வனவிலங்கு ஆர்வலர் டான் வில்லியம்ஸ் என்பவர் நேரடியாக விசாரணை நடத்தினார். அதில், தாம்பரம் நகராட்சி அனுமதி பெறாமலேயே ஊழியர்கள் கல்விநிறுவனத்தில் திரிந்த 11 நாய்களை பிடித்தது தெரியவந்தது. பிடிபட்ட நாய்களின் நிலை குறித்து அவர்கள் விசாரணை நடத்தியதில் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் சுந்தரம், தேவா ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.

உ.பி.,யில் ராமர் சிலை

Image
உ.பி.,யில் மதரீதியிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்படுகிறது.  இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமர் சிலை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளது உண்மை. சரயு நதிக்கரையில் 100 அடி உயர ராமர் சிலை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உ.பி.,யின் பல்வேறு சுற்றுலா தலங்களில் பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் அயோத்தி சிலை அமைப்பது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் நிறைய சிலைகளை பார்க்கலாம். அதுபோல், சுற்றுலாவை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமைதியை விரும்புகிறது -சீனா

Image
சிக்கிமில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், எல்லை அருகே, சீன பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களுடன், கலந்துரையாடினார். அமைச்சரின் இந்த தன்மை சீனாவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்து உள்ளது.  இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என சீனா அறிவித்துள்ளது. நாதுலா எல்லை பகுதிக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் பலி - உ.பி.,

Image
கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, குழந்தைகள் இறப்பை தடுக்க, உ.பி., அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அரசு மருத்துவமனைகளில், போதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் இறந்துள்ளன. இது குறித்து, அந்த மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சமீபத்தில், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல; அது போலவே, உரிய சிகிச்சையும் வழங்கி உள்ளோம். அந்த குழந்தைகள், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய அரசு அதிகாரி

Image
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி,25 விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மாலுமியாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேலை அணிவது, பெண்கள் அணியும் மாடல் உடை அணியத் துவங்கினார். மணீஷ்கிரியின் செயலில் சந்தேகம் ஏற்படவே விசாரித்ததில் விடுமுறையில் சென்ற போது மும்பையில் மருத்துமனையில் ஒன்றில் பெண்ணாக மாறியதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக அவரை கிழக்கு கடற்படை கமாண்டர் உத்தரவின் பேரில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யபட்டார்.

ஐ.நா., சபையில் காஷ்மீர் விவகாரம்

Image
ஐ.நா., சபையில் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருவதற்கு  இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இதற்கு இந்திய தூதர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் கண்டனம் தெரிவித்து அளித்த பதில், குழுவின் திட்டத்தில் இல்லாத ஒரு பிரச்னையை இங்கு பாகிஸ்தான் தூதர் கொண்டு வருவதை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. மறுபரிசீலனைக்கே தகுதியில்லாத பிரச்னையை கொண்டு வந்து பாகிஸ்தான் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. குழுவில் உள்ள அனைத்த நாடுகளும் சுய ஆட்சி குறித்து விவாதிக்கும் போது, வழக்கம் போல் ஒரு நாடு குறிப்பிட்ட ஒரு விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சந்தானம் மீது வழக்குப்பதிவு

Image
தமிழ் சினிமாவின் காமெடியானாக கலக்கி தற்போது கதாநாயகனாகவும் ஜெயித்து வருபவர் நடிகர் சந்தானம்.இவருக்கும் சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்தப் பிரச்னையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தில் சந்தானம் தன்னைத் தாக்கியதாக, ஒருவர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சந்தானம் தரப்பிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணை தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சந்தானம் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சொந்த நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட தானமாக வழங்கிய நபர்

Image
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் சுவாமி (50), இவர் மிகவும் ஏழ்மையானவர்  மற்றும் படிப்பறிவு இல்லாதவர். மேலும், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.அப்படி பல பிரச்சனைகள் இருந்தும் தனக்கான வீட்டு நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக வழங்கியுள்ளார்.அங்கு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், வசித்த வீட்டை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக வழங்கிவிட்டு வசிப்பதற்கு இடமில்லாமல் நடை பாதையில் வசித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களும் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ராஜ்கிஷோர் கூறியதாவது: நான் பள்ளிக்கூடம் போனது இல்லை, ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மனைவியை கணவன் அடிக்கலாம் - பெண்கள் கருத்து

Image
மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவியுடன், தொண்டு நிறுவனம், பீஹாரில், பெண்களின் மனநிலை தொடர்பாக, விரிவான கருத்துக் கணிப்பை, சமீபத்தில் நடத்தியது. இதில், பீஹார் பெண்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 'கணவனிடம், மனைவி வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது; அவ்வாறு ஈடுபடும் மனைவியை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு' என, அம்மாநிலத்தைச் சேர்ந்த, 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'பண்பாடு, விதிமுறைகளை மதித்து நடக்காத மனைவியை அடிக்கும் அதிகாரம், கணவனுக்கு உண்டு' என, 41 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், 'மனைவியை, கணவன் அடிக்க தகுந்த காரணம் இருக்க வேண்டும்' என, வேலைக்கு செல்லும் பெண்களில், 56 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 'உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால், மனைவி மறுப்பு தெரிவிப்பது தவறில்லை' என, 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

'ஆன் - லைனில்' பட்டாசு

Image
டில்லியில், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டில்லி மற்றும் தேசிய ' தலைநகர் பகுதிகளில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல், தடை விதித்திருந்தது. சமீபத்தில், இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம், அக்., 31 வரை, டில்லியில், பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது. அதனால், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆன் - லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், 'ஆன் - லைன்' மூலம், பட்டாசு வாங்கும் முயற்சியில், டில்லி மக்கள் இறங்கி உள்ளனர்.

அறுவை சிகிச்சை பெற மருத்துவ, 'விசா

Image
பாகிஸ்தானைச் சேர்ந்தவர், முகமது அஷ்ரப். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 'இவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். டில்லியில் உள்ள, மருத்துவமனை ஒன்றில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற, அஷ்ரப் விரும்பினார். இதையடுத்து, தன் தந்தைக்கு, மருத்துவ விசா வழங்கக் கோரி, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு, அஷ்ரபின் மகன், ஹமீது, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த, சுஷ்மா சுவராஜ், முகமது அஷ்ரபுக்கு, மருத்துவ விசா வழங்க உத்தரவிட்டு உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, ஹமீது அனுப்பியுள்ள பதிலில், 'மனிதநேயம் மிக்க உங்கள் செயலை, மறக்க மாட்டோம்' என, தெரிவித்து உள்ளார்.

பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா

Image
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று  முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை விரைவில் விஜய் டிவி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

குத்தூசி' - விவசாயம் பற்றிய திரைப்படம்

Image
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் ‘குத்தூசி’. முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது. இதில் ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் வெளிநாட்டு நடிகர் அந்தோணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம். காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

ஆதார் கட்டாயம்

Image
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏற்கனவே வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஷ் பத்திரம், பப்ளிக் பிரோவிடண்ட் பன்ட் உள்ளிட்ட அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கம் ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அஞ்சலகங்களில் டெபாசிட் செய்து வருபவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிகிச்சைக்காக விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்-சுஷ்மா

Image
இந்தியாவில் சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு  டுவிட்டரில் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், "எனது 3 வயது மகளுக்கு அவசரமாக இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உடனடியாக விசா வழங்கி உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்" எனக்கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சுஷ்மா, உங்களின் மகள் இருதய அறுவை சிகிச்சைக்காக விசா வழங்கப்படுகிறது. விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறோம்" எனக்கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் கவுரிக்கு பிரிட்டன் அமைப்பு விருது!

Image
மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ், இந்த ஆண்டுக்கான, 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ரா இன் வார்' என்ற அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு, அன்னா பொலிகோவஸ்கயா விருது வழங்கி கவுரவிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பறக்கும் தாமரை

Image
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர், நரேந்திர மோடி, கடந்தாண்டு  நவம்பரில் வெளியிட்டார். இது குறித்த தனிப் பாடலை, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:'பறக்கும் தாமரை' என்ற இந்த தனிப் பாடல் மூலம், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு, அது வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை இசை வடிவில் கொடுத்துள்ளேன்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்

Image
கர்நாடகா மாநிலம் பெங்களூரில், முத்ரா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை,  பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, அனந்தகுமார், நேற்று துவக்கி வைத்தார்; பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில், 27 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது.இதன் மூலம், சிறிய வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பலன் கிடைக்கும். ஆறு கோடிக்கும் அதிகமானோர், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர்.ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு, அடுத்த, 15 நாட்களில், பணம் திருப்பி கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் கட்டணம் - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு

Image
டில்லியின் முக்கிய நகரங்கள் மற்றும் அரியானா, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில  நகரங்களை இணைத்து டில்லி மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளுக்கு 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வந்த இந்த ரயிலின் பயண கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறைந்த பட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.அதன்படி, புதிய கட்டண உயர்வு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.