ஏர் ஏசியா இயர் எண்ட் சலுகை

ஏர் ஏசியா நிறுவனம் இயர் எண்ட் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 

உள்நாட்டு பயணத்திற்கு ரூ.1,299 மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2,399 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை கொண்டு வரும் 15 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம். பயணத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ளலாம். உள்நாட்டு பயணத்தில் பெங்களூரு, ராஞ்சி, ஐதராபாத், புனே, கொல்கத்தா, கொச்சி, டெல்லி ஆகிய இடங்கள் அடங்குகின்றன. மேலும், வெளிநாட்டு பயணத்தில் கோலாலம்பூர், பாலி, பாங்காக், க்ராமி, புகெட், மெல்பெர்ன், சிட்னி, சிங்கப்பூர், ஆக்லாந்து உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்லலாம். இந்த சலுகை எல்லா விமானங்களிலும் அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. புக் செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான ரத்து கட்டணமும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்