நாய்களை கொடுமைப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்
கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து நகராட்சி ஊழியர்கள் நாய்களை கழுத்தை இறுக்கும்
வகையில் கயிற்றால் இழுத்த சம்பவம் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவ துவங்கியது. அதில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில், தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் இரண்டு பேர், நாய் ஒன்றை கழுத்திலும், உடம்பிலும் கயிற்றால் இறுக்க கட்டி அறை ஒன்றிலிருந்து தரதரவென இழுத்து சென்றனர். அப்போது அந்த நாய் மூச்சுவிட முடியாமல் கதறியது. தொடர்ந்து அந்த நாயை கல்வி நிறுவனம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். அப்போது நாய் மயங்கி விழுந்தது போன்று இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த வனவிலங்கு ஆர்வலர் டான் வில்லியம்ஸ் என்பவர் நேரடியாக விசாரணை நடத்தினார். அதில், தாம்பரம் நகராட்சி அனுமதி பெறாமலேயே ஊழியர்கள் கல்விநிறுவனத்தில் திரிந்த 11 நாய்களை பிடித்தது தெரியவந்தது. பிடிபட்ட நாய்களின் நிலை குறித்து அவர்கள் விசாரணை நடத்தியதில் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் சுந்தரம், தேவா ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.

Comments
Post a Comment