ஆதார் கட்டாயம்

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏற்கனவே வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இதன்படி, அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஷ் பத்திரம், பப்ளிக் பிரோவிடண்ட் பன்ட் உள்ளிட்ட அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கம் ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அஞ்சலகங்களில் டெபாசிட் செய்து வருபவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்