அமைதியை விரும்புகிறது -சீனா
சிக்கிமில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், எல்லை அருகே, சீன பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களுடன், கலந்துரையாடினார். அமைச்சரின் இந்த தன்மை சீனாவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்து உள்ளது.
இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என சீனா அறிவித்துள்ளது. நாதுலா எல்லை பகுதிக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment