வளர்ச்சிப்பாதையில் இந்தியா : நிதீஷ் குமார்

பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் மோடி தொடர்பான புத்தகத்தின் ஹிந்தி பதிப்பை, முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டார். பின் அவர் பேசியதாவது, நாடு இதுவரை பல்வேறு பிரதமர்களை சந்தித்துள்ளது. அவர்கள் பிரதமர் பதவியை மட்டும் அலங்கரித்துள்ளனரே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களது பங்கு என்று குறிப்பிட்டு சொல்லும்படி எவரும் அமையவில்லை. அந்த குறையை போக்கும் வகையில், பிரதமர் மோடியின் நிர்வாகம் அமைந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரியின் மூலம் சிக்கலான வரிவிதிப்பு மற்றும் வரிநிர்ணய முறைகள் பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையாக்கப்பட்டுள்ளன. வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை ஆக்கப்பட்டுள்ளதால், வரி ஏய்ப்பு, மோசடி உள்ளிட்டவை நடக்க வாய்பில்லை.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டுமென்றால், சில அசாத்திய நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என்பதை மோடி, முன்கூட்டியே கணித்திருந்தார். அதன்விளைவாகவே, பண மதிப்பிழப்பு நிகழ்வு. இதன்மூலம், மக்கள் சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் விளைந்த நன்மைகளை பட்டியலிட முடியாது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்