டெங்கு பரவ உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் காரணம் - ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஸ்டாலின்
செய்தியாளர்களிடம் கூறியதாவது : டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில், 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். தினமும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையுடன் நின்று விடாமல், தி.மு.க., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி அதற்கான சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலவேம்பு கசாயம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் அளித்து வருகிறோம். இந்த கொடுமைகளுக்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் நடக்காதது தான். தேர்தல் நடந்து இருந்தால், மக்கள் பிரதிநிதிகள் சுகாதார பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு ஒழியும்.

Comments
Post a Comment