குத்தூசி' - விவசாயம் பற்றிய திரைப்படம்
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் ‘குத்தூசி’. முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.
இதில் ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் வெளிநாட்டு நடிகர் அந்தோணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம். காதல், ஆக்ஷன், எமோஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

Comments
Post a Comment