இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் - அன்னா ஹசாரே

டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஹசாரே பேசியதாவது:திருமணம் 

செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழ்வது எளிதான விஷயம் அல்ல. கூர்மையான வாள் மீது நடப்பதை விட மிகவும் கடினமான விஷயம். இளைய தலைமுறையினர் என் வழியில் நடப்பதாக கூறி, திருமணம் செய்யாமல் இருக்க வேண்டாம். கறைபடியாத வாழ்க்கை வாழ, அது உதவாது. இளைய தலைமுறையினருக்கு குடும்பம் இருக்க வேண்டும். தூய்மையான எண்ணங்களும், செயல்களும் வேண்டும். மனம் என்பது அலைபாயும் நிலை கொண்டது. மிகவும் கூர்மையானது. அத்துடன், மிகவும் தந்திரமானது. ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்த விஸ்வாமித்ரரையே மனம் அலைபாய வைத்து விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்